உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

மறைமலையம் - 23

பின் அடுத்துடுத்துத் தோன்றுவ வாயினவென்க. கிறித்து பிறப்பதற்கு முற்றோன்றிய தமிழ் நூல்களெல்லாம் இயல் இசை நாடகங்களைப் பற்றிய 'தொல்காப்பியம், “முறுவல்,’ ‘சயந்தம், 'களரியாவிரை,’ ‘பரிபாடல்' முதலியனவும் அறம் பொருள்

இன்பங்களை விளக்கும் நாலடியார்’ 'திருக்குறள்,’ அகநானூறு,’ ‘புறநானூறு,’ 'கலித்தொகை' முதலியனவுமே யாம். கடவுள் உயிர் உலகம் என்னும் முப்பொருளைப் பற்றிய உண்மைகள் ஆராய்ச்சி வகையால் மிகவிரிக்கப்படாமல் உண்மைகளாகவே வைத்துப் பண்டைத் தமிழ் நூல்களிற் சொல்லப்பட்டமையால், ஆசிரியர் திருமூலர் அவைகளைக் குறித்துச் சொல்லுங்கால்,

66

“அங்கிமி காமைவைத் தான்உடல் வைத்தான் எங்குமி காமைவைத் தான்உலகு ஏழையும் தங்கிமி காமைவைத் தான் தமிழ்ச் சாத்திரம் பொங்கிமி காமைவைத் தான்பொரு டானுமே”6

(97)

என்று அருளிச்செய்தார். தமிழ் நூல்களும் அவற்றின் பொருள் களும், சிலவாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவினாரான மக்கள் உணர்ந்து மெய்ப்பயன் பெறுதற்குத் தக்க அளவு வைத்து அறிவின் எல்லை கடவாமல் அழகுற அமைக்கப்பட்டன என்பது த் திருப்பாட்டினால் நன்கு விளங்குகின்றது. நெருப்பானது உலகிற் பயன்படத்தக்கவளவு ஏனை நான்கு பொருளோடு அடக்கிவைத்து அமைக்கப்பட்டிருத்தல் போலவும், காய்ச்சப் படும் பால் பொங்கி வழிந்து போமாயின் எவர்க்கும் பயன்படாது போமாதலால் அஃது அவ்வாறு ஆகாமைப்பொருட்டுக் கைவல் ஆயர் அதனைக் குழிசியின் உள்ளடாக்கிக் காய்ச்சிப் பயன்படுத்துதல் போலவும், தமிழ் நூல்களும் அவற்றின் பொருள்களும் அமைக்கப்பட்டிருந்தன வென்று திருமூல நாயனார் உவமை யெடுத்துக் காட்டி விளக்கியவதனால், அம் முப்பொருளுண்மைகளை விரித்த வடமொழி நூல்கள் பயன்படத்தக்க வகையாய் அமைக்கப் படாமல், தன்னெல்லை கடந்த தீயும் பொங்கி வழிந்து போன பாலும்போல் அளவின்றி விரிந்து தம்மையுணர்வார்க்குப் பெருந்தடுமாற்றத்தை விளைத்துப் பயன்படாவாயின வென்னும் உண்மையையும் அறியவைத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/73&oldid=1588344" இலிருந்து மீள்விக்கப்பட்டது