உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலிய

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

ஆகமநூல்களில்

7

65

இனி, இங்ஙனம் பயன்படும் வகையாய் ஆக்கப்பட்ட தமிழ் ஆகமநூல்கள், பௌத்தமதம் தமிழ்நாட்டிற் பரவிய கி.பி. முதல் நூற்றாண்டு துவங்கி இயற்றப்பட்டமையாலன்றே அவற்றின் மொழிபெயர்ப்பாய் இஞ்ஞான்று உலாவும் ‘பௌட்கரம் பௌத்த மத மாயாவாதக் காள்கைகள் எடுத்து மறுக்கப்படுகின்றன. இங்ஙனம் சிவாகமங்கள் பௌத்தமத காலத்தில் தோன்றி மிக்கு வழங்கினமையால், அக்காலத்திருந்த திருவாதவூரடிகள் அவைதம்மைத் தாம் அருளிய 'திருவாசகத்'தில் அடுத்தடுத்துக் குறிப்பிடுவாராயினர். அப் பௌத்த காலத்திற்குப் பின் சமண்மதம் தலையெடுத்து அக்காலத்திருந்த தமிழ்ச் சிவாகமங்களை நெருப்பிட்டுக் கொளுத்தி அழித்துவிட்ட மையின், சமணகாலத்தில் அவை வழங்காதொழிந்தன, திருநாவுக்கரசு நாயனாரைக் கடலில் வீழ்த்தியும், நீற்றறை யிலிடுவித்தும் பலகொடுந்தொழில்களாற் கொல்ல முயன்ற சமணர்கள் 'சிவாகம நூல்களை' வாளாவிடுவார்களோ? திருஞானசம்பதப் பெருமானைப் பல்லாயிரம் அடியார் களோடு வைத்துத் தீயிட்டுக் கொளுத்திய அச் சமணர்கள் 'சிவாகம நூல்களை’க் கொளுத்தாமல் விட்டிருப்பார்களோ? சமணர் களைப்போல் பௌத்தர்கள் சைவசமயத்திற்கு அத்துணைக் கொடும் பகைவர்கள் அல்லர்; அதனால் அவர்களது காலத்திற் சைவசமய நூல்களுக்கு அத்துணை இடர் நேர்ந்திலது. பௌத்தர்களும் சைவர்களும் ஒருமித்து வாழ்ந்தமை ‘மணிமேகலை,' 'சிலப்பதிகாரம்' என்னும் பழைய செந்தமிழ்க் புலனாகின்றது. சமணர்களோ அவர்போல் அல்லர்; சைவசமயத்தை வேரோடு அழிக்கக் கங்கணம் கட்டிநின்றவர்; இவர்களது கொடுமைக்கு அஞ்சியே ‘திருமந்திரம்' என்னுந் தமிழ்ச் சிவாகமநூல் உலகில் வ வழங்காமல் திருவாவடுதுறைக் கோயிற் பலிபீடத்தின்கீழ்ப் புதைத்து வைக்கப்பட்டிருந்தது. தேவார திருவாசகங்கள் தில்லைச் சிற்றம்பலத்தறையிலே பூட்டி வைக்கப்பட்டன; அங்ஙனம் அவர்க்கஞ்சிப் பூட்டிவைக்கப்பட்ட அவைகளிற் பெரும் பகுதியைக் கறையான் தின்று அழித்தது! இப்போது அவைகளில் எஞ்சி நிற்பது மிகச் சிறுபகுதியேயாகும். ஞானமிர்தம்' என்னுந் தமிழாகமம் அஞ்ஞான்றிருந்த

காப்பியங்களால் நன்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/74&oldid=1588345" இலிருந்து மீள்விக்கப்பட்டது