உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

67

இவ்வுரைநடை பழைய ஆரியமொழி நூல்களுள் யாண்டுங் காணப்படாமையானும் இந்நூல்கள் மிகவும் பிற்பட்ட காலத்தே இயற்றப்பட்டன வென்பது திண்ணமாம்.

அல்லதூஉஞ், சிறிதேறக்குறைய இருநூறாண்டுகட்கு முன்னிருந்த சிவாக்கிர யோகிகளும், அவர்க்குப் பின்வந்த சிவஞான யோகிகளும் தம்முரைகளுட் குறித்து வைத்ததை நம்பி, ஆசிரியர் மெய்கண்டதேவ நாயனார் அருளிச் செய்த 'சிவஞானபோதம்'என்னுஞ் சைவசித்தாந்தத் தமிழ் முதல் நூலை, இரௌரவாகமத்தின் இறுதியின் உள்ளதாகத் தமிழ்ப் புலவர் சிலராற் பிழைபட எண்ணிக்கொள்ளப்பட்ட வட மொழிச் சிவஞானபோதத்தின் மொழி பெயர்ப்பென்று கூறுவாருஞ் சிலர் உளர். மெய்கண்ட தேவர் தாம் அருளிச் சய்த சிவஞானபோதத்தின் மொழி பெயர்ப்பென்று கூறுவாருஞ் சிலர் உளர். மெய்கண்டதேவர் தாம் அருளிச் சய்த சிவஞானபோதத்தை வடமொழிச் சிவஞான போதத்தின் மொழிபெயர்ப்பென்று யாண்டும் கூறிற்றிலர்; மெய்கண்ட தேவர்க்கு முதன் L மாணாக்கரும், நூலுணர்ச்சியன் மிக்கவரும், சிவஞானபோதத்தின் வழி நூலாகிய 'சிவஞான சித்தி' என்னும் அரும் பெருநூலை ஆக்கியவரும் ஆகிய அருணந்தி சிவனாரும் தம் ஆசிரியர் அருளிச்செய்த அச் 'சிவஞானபோதநூல் வஞானபோதநூல்' வடமொழியி னின்றும் மொழி பெயர்த்துச் செய்யப்பட்டதென யாண்டும் ஓதிற்றிலர். அவர்க்குப்பின் சார்பு நூலாகிய 'சிவப்பிரகாசமும்', ஏழு சைவசித்தாந்த நூல்களும அருளிச்செய்த உமாபதிசிவனாராதல் அதனை மொழிபெயர்ப்பு நூலென்று கூறினரோவெனின், அவரும் அங்ஙனம் எங்குங் கூறிற்றிலர்.

ஏனை

ஆகம

மெய்கண்டதேவர் சிவஞானபோதம் அருளிச்செய்தது இற்றைக்கு அறுநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னராகும். அவர் காலத்திலாதல், அவர்க்கு முற்பட்ட காலத்திலாதல் வடமொழியில் 'சிவஞானபோதம்' என்பதொரு நூல் இருந்ததென்பதற்கு ஏதொரு சான்றுங்காண்கிலேம். மெய்கண்டதேவர் காலத்திற்கு நானூறாண்டு பிற்பட்டிருந்த சிவாக்கிரயோகிகள் முதலாகத்தான் வடமொழிச் சிவஞான போதத்தின் பெயர் கூறுவாரைக் காண்கின்றேம். எனவே, சிவாக்கிரயோகிகள் காலத்தோ அல்லது அதற்குச் சிறிது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/76&oldid=1588347" இலிருந்து மீள்விக்கப்பட்டது