உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

83

பொருட்டு டு எதற்காகச் செய்யப்படுகின்றன வென்னும் னாவுக்கு அங்ஙனம் கொள்வார் விடைகூறுதல் ஆகாமையின் அத்தொழில்களெல்லாம் வெறும் பயனற்றனவேயா மெனவும், தமதறிவுகொண்டு இறைவனை அறிவாரும் அறிவிப்பாரும் இல்லையாய் முடிதலின் இக் கோட்பாட்டின்படி எல்லாம் வெறும் பாழேயாய் முடியுனெவும் ட னவும் உணர்ந்து உணர்ந்துகொள்க. அல்லதூஉம், இறைவனருள்வழி நின்றாரிற் சிறுமகாவாயிருந்த காலத்திலேயே எல்லாம் ஓதாதுணர்ந்தவரான திருஞான சம்பந்தப் பெருமானினும் மிக்கார் பிறரில்லை; அவரிடத்து இறைவன் முனைத்துவிளங்கி நின்றனனாகலின் அவர் அருளிச்செய்த தேவாரப் பதிகங்களை யெல்லாம் இறைவனே யருளிச்செய்தா னென்னல் வேண்டும். ஆனால், அவற்றை அங்ஙனம் வழங்குவாரைக் கண்டிலம். இறைவனை நேரேகண்டு அவனருளை முற்றும் பெற்றுநின்ற திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருப்பாட்டுகளையே இறைவனருளின வென்றல் அமையாதாயின் திருஞானசம்பந்தப் பிள்ளையாரோடு ஒத்தவரென்றாவது அல்லதவர்க்கு மேற்பட்டவரென்றாவது கொள்ளுதற்கு ஒரு சிறிதும் இடம் பெறாத வேதநூற் புலவர்களும் வேதாங்கநூல் புலவர்களும் இயற்றிய இருக்கு, சிட்சை முதலான நூல்களை இறைவனே அருளிச் செய்தா னென்றல் யாங்ஙனம் பொருந்தும்? வடமொழியிலுள்ள இவ்வாரிய நூல்களை விடத், தமிழ்மொழியிலுள்ள திருக்குறள்' எத்தனையோ நூறாயிர மடங்கு உயர்ந்ததென இவ் வுலகின்கண் உள்ள எல்லாரும் ஒத்துரைப்பர். அத் தன்மைத் தாகிய தெய்வத் திருக்குறளையே தமிழ்ச் சான்றோர் இறைவனருளிச்செய்த நூலென்று உரையாமல் திருவள்ளுவ னார் அருளிச்செய்த தென்றே உண்மையாக வழங்கி வருகின்றனர். ஆரியப் பார்ப்பனரோ தமக்கு உயர்வுதேடும் பொருட்டும், தமது உயர்வுக்கு இன்றியமையாத் துணையென்று தம்மாற் பிழையாகக் கருதப்பட்ட இருக்கு, சிட்சை முதலான சிற்றறிவு அருளிச் செய்தனவென்று ஒரு சாரரும், அற்றன்று வேதங்கள் கடவுளாலும் ஆக்கப்படாமல் என்றும் ‘சுயம்பு வாகவே' (தானாகவே) உளவென்று மற்றொரு சாராருமாக ஒரு பெரும் பொய்யுரையினைக் கட்டி, அப் பொய்யுரைக்கட்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/92&oldid=1588364" இலிருந்து மீள்விக்கப்பட்டது