உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

21.

மாணிக்கவாசகர் குறித்த

கடைச்சங்க காலம்

இனி, மாணிக்கவாசகர் காலத்தை ஆராய்ந்தாருள் ஒருசாரார், அடிகள் தாம் அருளிய திருச்சிற்றம்பலக் கோவையார் இருபதாஞ் செய்யுளில்,

“உயர்மதிற் கூடலின் ஆய்ந்த ஒண்டீந் தமிழின் துறை”

என்று தமிழாராய்ந்த மதுரைச் சங்கத்தைக் குறிப்பிட்டிருத்தலின், அவர் அம் மதுரைத் தமிழ்ச்சங்கம் இருந்த கி.பி. எட்டாம் நூற்றாண்டிற்குப் பின்னே இருந்தோ ராவரென உரைத்தார். ன இஞ்ஞான்று செய்யப்படுங் கல்வெட்டு ஆராய்ச்சி யானும் நூலாராய்ச்சியானும் கி.பி. ஆறாம் நூற்றாண்டிலும் ஏழாம் நூற்றாண்டின் இடையிலும் இருந்தவராக ஐயுறவுக்கு இடனின்றித் துணியப்பட்ட திருநாவுக்கரசு நாயனாரும் திருஞானசம்பந்த மூர்த்திகளும் தாம் அருளிச்செய்த திருப்பதிகங்களில்,

நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம்ஏறி நற்கனகக் கிழிதருமிக் கருளினோன்காண்

எனவும்,

புகலி ஞானசம்பந்தன் உரைசெய்

சங்கமலி செந்தமிழ்கள்

அற்றன்றி யந்தண் மதுரைத் தொகையாக்கினானும்

(திருப்புத்தூர்,3)

(திருத்தேவூர்)

.

(பொது)

எனவும் மதுரைத் தமிழ்ச்சங்கந் தமக்கு முன்னிருந்ததனைத் தெளிவுறக் குறிப்பிட்டிருத்தல் கொண்டு, அது கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னமே யிருந்தமை தெளியப்படுதலின், அஃது எட்டாம் நூற்றாண்டில் இருந்ததென உரைத்தாருரை பெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/12&oldid=1590415" இலிருந்து மீள்விக்கப்பட்டது