உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

  • மறைமலையம் - 24

தொரு தலைதடுமாற்றவுரையாம். ஆகவே, அப் பிழைபாட்டுரை கொண்டு மாணிக்கவாசகர் ஒன்பதாம் நூற்றாண்டிலிருந் தாரென்ற தூஉம் பெரிதும் பிழைபடுவதாமென மறுக்க.

னிச், “சேரன்செங்குட்டுவன்” என்னும் தமிழ் நூலை ஆக்கியோரும், ‘தென்னிந்திய சைனமத ஆராய்ச்சிகள்” என்னும் ஆங்கில நூலை ஆக்கியோரும் மதுரைத் தமிழ்ச் சங்கம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட தாகாது எனக் கூறினாராகலின், அச்சங்கத்தைக் குறிப்பிட்ட மாணிக்கவாசகர் ட கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் இருந்தா ரெனல் பொருந்தாதாம் பிறவெனின்; அவ்விருவர் தங்கூற்றுக்களும் உண்மைக்கு மாறாதலை விளக்கிக் காட்டும் முகத்தால், அடிகள் குறிப்பிட்ட மதுரைத் தமிழ்ச் சங்கம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்டிருந்தமை தெளிவுறுத்துதும், கி.பி. 470 ஆம் ஆண்டின் வஜ்ரநந்தி என்பவரால் ஒரு தமிழ்ச்சங்கந் தென்மதுரையில் நிலைபெறுத்தப்பட்டதெனத் 'திகம்பரதரிசனம்' என்னுஞ் சமண்நூல் கூறும் வரலாற்றினை அவ்விருவருந் தாம் இயற்றிய நூல்களில் எடுத்துக்காட்டி அதனை உண்மை யெனத் தழுவி யிருக்கின்றனர்.? அங்ஙனம் ஒரு தமிழ்ச்சங்கம் நிலை பெறுத்த வேண்டிற்றானது என்னையென நுனித்து ஆராயின், அதற்கு முன்னிருந்த கடைச்சங்கம் அழிந்து பட்டுத் தமிழாராய்ச்சியுந் தமிழ்வளர்ச்சியும் நிலைகுலைந்து போனமையினாலேயா மென்பது புலப்படும். அற்றேல், முன்னிருந்த கடைச்சங்கம் அவ்வாறழிந்து படவுந் தமிழ் நிலைதடுமாறவும் நேர்ந்த இடுக்கண்கள் யாவையோவெனிற் கூறுதும். கண்ணகி

காழுநன் கோவலனை, அஞ்ஞான்று மதுரையில் அரசுபுரிந்த ஆரியப்படைகடந்த பாண்டியன் நெடுஞ்செழியன்' என்னும் மன்னன் ஆராயாது கொலை செய்வித்துத் தான்செய்த அப்பிழையினைக் கண்ணகி எடுத்துக்காட்டிய வழிப்பெரிதும் ஏங்கி அரியணையில் இருந்தபடியே உயிர் துறந்தான்; அதுகண்டு அவன்றன் மனைவியும் உயிர்துறந்தாள். கண்ணகியோ தன் கணவனையிழந்த துயரமும் அரசன் தன் கணவனை நடுவின்றிக் கொன்றதனால் உண்டாய பெருஞ்சினமும் பொறாளாய்த் தன் கொங்கைகளுள் ஒன்றைத் திருகி மதுரைமேல் எறிய, அந் நகரந் தீப்பற்றிக் கொண்டது.நகரத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/13&oldid=1590420" இலிருந்து மீள்விக்கப்பட்டது