உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சனை

3

5

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் உள்ளார் பலமுகமாய் உயிர்பிழைத்தோடினார். அப்போது ஆங்கிருந்த கடைச்சங்கப் புலவர்களும் அங்ஙனமே அந் நகரத்தைவிட்டுப் பலவாறாய்ப் பிரிந்து போயினர். அச் சங்கப் புலவருள் ஒருவரான மதுரைக் கூலவாணிகன் சாத்தனாரும் அங்கிருக்க மாட்டாமல், அப்போது மலை நாட்டை அரசுபுரிந்த சேரன் செங்குட்டுவனையடைந்து துறவுபூண் நல்லிசைப் புலவரும் செங்குட்டுவன் தம்பியுமாய இளங்கோ வடிகளோடு அளவளாவியிருந்தனர். பாண்டி நாடோ அர- யிழந்தமையினாலும், தன் தலைநகர் தீப்பற்றி எரியுண்டமை யினாலும், “மழைவறங்கூர்ந்து வறுமையெய்தி வெப்பு நோயுங் குருவுந் தொடரப்”3 பெரிது வருந்திற்று. கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் பின்னர் அரசுக்கு வந்தான்; வந்தும் அரசியல் ஒழுங்குபெறவில்லை. இதற்கு முன்னெல்லாம் பேராற்றலுடையராய் விளங்கிய பாண்டிய அரசரது வலிமையும் இப்போது மங்குவதாயிற்று. கவலையாற் பெரிது நைந்து வெற்றிவேற் செழியனும் இறந்துபட, அவற்குப்பின் ‘உக்கிரப்பெருவழுதி' என்பான் அரசுக்கு வந்தான். பாண்டிய அரசில் நேர்ந்த இக் குழப்பங்களை யெல்லாம் நேரே கண்டவரான சாத்தனாரும் இளங்கோ வடிகளும் சிலப்பதிகார மணிமேகலைகளில் அவற்றை நன்கெடுத்துக் கூறுதல் காண்க.

இவ் 'உக்கிரப்பெருவழுதி'யுங் 'கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி’யும் வெவ்வேறு பாண்டி மன்னராவ ரென்பது பகுத்துணர்ந்து கொள்ளல் வேண்டும். உக்கிரப் பெருவழுதி ‘மணிமேகலை' ஆசிரியர் கூலவாணிகன் சாத்தனார்க்குப் பின்னே கி.பி.மூன்றாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்தோனாவன். கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதியோ திருக்குறள் அரங்கேறிய காலத்திற் கூலவாணிகன் சாத்தனாரோடு அதனை ஒருங்கிருந்து கேட்டு அதற்குச் சிறப்புப்பாயிரஞ் சொன்னோன் ஆவன். திருக்குறள் அரங்கேறிய ஞான்று கபிலர், இடைக்காடனார், முதலான நல்லிசைப்புலவர் ஆண்டில் மிக முதியராயும், பரணர், கூலவாணிகன் சாத்தனார் முதலான நல்லிசைப் புலவர் ஆண்டில் மிக இளைஞராயும் இருந்தாரெனல் ஆராய்ச்சியாற் புலனாதலின், திருக்குறள் அரங்கேறிய காலம் கி.பி.முதல்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/14&oldid=1590424" இலிருந்து மீள்விக்கப்பட்டது