உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

ங்

மறைமலையம் 24

நூற்றாண்டின் பிற்பாதியிலிருத்தல் வேண்டுமென உணர்ந்து கொள்க; ஆகவே, கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி கி.பி. முதல் நூற்றாண்டிலிருந் தோனாவனென்பதூஉம் கருத்திற் பதிக்கற்பாற்று. கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்த உக்கிரப் பெருவழுதி பாண்டிய அரசு நிலைகுலைந்த காலத்தில் இருந்தவனாதலின், அவன் வலிமையிற் சிறந்த 'வேங்கை மார்பன்' என்னுங் குறுநில மன்னனை வென்று அவனது கானப்பேரெயிலைக் கைக்கொண்டா னென்பது சிறிதும் பொருந்தாது. அதுவேயுமன்றிக், கி.பி.முதல் நூற்றாண்டி ன் இறுதிவரையி லிருந்தவராகப் புலப்படும் ஒளவையாராற் பாடப்பட்டோன் 'கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெரு வழுதியே'யாகல் வேண்டுமல்லாற், கி.பி. மூன்றாம் நூற்றாண் டிலிருந்த உக்கிரப்பெருவழுதி யாகாமையும் உணரற்பாற்று. இவ்வாற்றாற் கி.பி.முதல் நூற்றாண்டின் பிற்பாதியிலிருந்து, சேரன் செங்குட்டுவனது காலமாகிய கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பாதி வரையிலிருந்த பரணருங் கூலவாணிகன் சாத்தனாரும் நீண்ட காலம் அஃதாவது தொண்ணூறு அல்லது நூறாண்டுக்கு மேல் உயிர்வாழ்ந்தா ராதல் வேண்டும்; இது முன்னும் 491, 492 ஆம் பக்கங்களில் விளக்கிக்காட்டினாம். அது நிற்க. காலத்தால் வேறுபட்ட இவ்விருவேறு உக்கிரப் பெருவழுதிகளையும் ஒருவரேயென இஞ்ஞான்றைப் புலவர்கள் மயங்கிக் கொண்டமையால் நேர்ந்த குழப்பங்களும் பிழைபாடுகளும் பல. அதுகிடக்க.

இனி, கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்த உக்கிரப்பெருவழுதி தனக்குமுன் நிலைகுலைந்த தமிழ்ச் சங்கத்தை மீண்டும் ஒருங்குகூட்டி நிலைபெறுத்த முயன்றி க்கலாம்; ஆனால், அம்முயற்சி கைகூடிற்றில்லையாதல் வேண்டும். கோவலனைக் கொல்வித்த காலந்தொட்டுப் பாண்டியரது அரசிற் பல குழப்பங்களும் இடர்ப்பாடுகளும் அடுத்தடுத்து நேர்ந்தன. தமிழ்நாட்டுக்குப் புறம்பே வ வடக்கிருந்த வடுகக்கருநாடர் பாண்டியநாட்டைக் கைப் பற்றுதற்கு இதற்கு முன் முயன்றும் அஞ்ஞான்றெல்லாம் பாண்டிவேந்தர் மிகவும் வலியராயிருந்தமையின் அஃதவர்க்குக் கைகூடிற்றில்லை. ஆனாற் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு துவங்கிப் பாண்டியரது

ம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/15&oldid=1590429" இலிருந்து மீள்விக்கப்பட்டது