உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

7

மகன்

ஆற்றல் குறைந்தமையிற் சோழமன்னரது துணைபெற்று வடுகக்கரு நாடர் பாண்டிய அரசர்மேற் படையெடுத்து வந்த வரலாறுகளை மேலே 262 262 பக்கம் முதல் 272 பக்கம் வரையில் வைத்து நன்கு விளக்கிக் காட்டி யிருக்கின்றேம். க்கிரப்பெருவழுதிக்குப் பின் அரசுக்கு வந்த வரகுணபாண்டியன் சிவபிரான் திருவடிக்கண் மெய்யன்புடையவனே யன்றிப், பேராண்மையில் மிக்கோன் அல்லன்; அதனால் அவன் தன்மேற் படை யெடுத்துவந்த சோழனை இறைவனருளால் துரத்தினமையும், அங்ஙனமே அவ்வரகுணன் அரசுக்குவந்த ஞான்றும் வடுகக்கருநாடர் அவன்மேற் படையெடுத்துவர அவனும் போர்த்திறம் இல்லானாகலின் இறைவனருளால் அவர் தம்மைத் துரத்தினமையும், அவனுக்குப் பின் அரசுக்குவந்த வரகுணன் பேரன் காலத்தில் மீண்டும் அவ் வடுகக் கருநாடர் படையெடுத்து வந்து அவளைக் கொன்று பாண்டிய அரசைக் கைப்பற்றிக் கொண்டமையும் ஆங்கே விளக்கிப் போந்தாம். அவைகொண்டு கிபி. மூன்றாம் நூற்றாண்டு முதல் அதன்முடிவு வரையில் அரசுபுரிந்த பாண்டி மன்னர்களின் அரசு செவ்வனே நடைபெறாமையினாலும், அயன்மன்னராற் கலக்குறுத்தப் பட்டமையினாலும் அந் நூற்றாண்டிலிருந்த பாண்டிமன்னர், தமக்கு முன்னே கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பாதியில் நிலைகுலைந்த மதுரைத் தமிழ்ச்சங்கத்தை மீண்டுங் கூட்டி நிலைநிறுத்த மாட்டாராயினர். மற்றுக் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியிற் பாண்டிநாட்டிற் புகுந்து, பாண்டியனரசை வௌவிய வடுகக் கருநாடரோ தமிழ்மொழிக்கு உரியரல்ல ராகலின், அவரும் நிலைகுலைந்த தமிழ்ச் சங்கத்தைப் பெயர்த்தும் உருப்படுத்திவைத்தாரல்லர்; மேலும், அக்கருநட அரசர் சமண்மதத்தினராகலிற் பாண்டி நாட்டிலிருந்த சிவபிரான் திருக்கோயில்களில் வழிபாடு நடக்க வொட்டாமல் அவற்றை அடைப்பித்துவிட்டன ரெனக் கல்லாடநூல் கூறுவதூஉம் நினைவிற் பதிக்கற்பாற்று. இக்கருநடரது ஆட்சிக் காலந் தாட்டுத்தான் சமண்மதந் தமிழ்நாட்டில் மிக்குப் பரவலாயிற்று. திருஞானசம்பந்தர் காலத்தில், அஃதாவது கி.பி. ஏழாம் கி.பி.ஏழாம் நூற்றாண்டின் முற்பாதியில் இருந்த கூன்பாண்டியன் முதலிற் சமண்மதத் தினனாயிருந்து பின்னர்த் திருஞானசம்பந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/16&oldid=1590434" இலிருந்து மீள்விக்கப்பட்டது