உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

  • மறைமலையம் - 24

பெருமானாற் சைவ சமயத்திற்குத் திருப்பப்பட்ட வரலாற்றினை உற்று நோக்குவார்க்குங் கி.பி. நான்காம் நூற்றாண் துவக்கத்திலிருந்து ஏழாம் நூற்றாண்டின் நடுவரையிற் சமண் மதம் பாண்டிநாட்டில் மிக்குப் பரவியிருந்தமை புலனாம். இவ்வாறு வடுகக் கருநாடராகிய களப்பிரரால் பாண்டியரரசு சிலகாலங் கவர்ந்துகொள்ளப்பட்டமை வேள்விக் குடிப் பட்டயத்தாலும் புலனாதலிற் 'கல்லாடம்', 'பெரியபுராணம்', 'நம்பியார் திருவிளையாடல்” என்னும் பழைய தமிழ்நூல்கள் மூன்றானும் நுவலப்பட்ட இக் கருநடரது பாண்டிநாட்டு ஆட்சி சிறிதும் ஐயுறற்பாலதன்றென்க.

இனி, இக் கருநடரது ஆட்சி மதுரையில் நிலைபெற்ற காலம் கி.பி.நான்காம் நூற்றாண்டுமுதல் ஐந்தாம் நூற்றாண்டின் ஈறுவரையிலாதல் வேண்டும். ஏனெனில், வேள்விக்குடிப் பட்டயத்திற் சொல்லப்பட்ட ‘கடுங்கோன்' என்பவனைத் தலைக்கொண்டு தொடங்கிய புதுப்பாண்டிய மரபு ஆறாம் நூற்றாண்டின் நடுவிலிருந்து மதுரையில் அரசாளலான செய்தி அப் பட்டயத்தால் அறியக்கிடத் தலானும், அப் பாண்டிமரபு தொடங்குதற்கு முன்மதுரையை வௌவிய கருநடரது ஆட்சி கால்வழியற்று மாய்ந்துபோக அப்போது பாண்டிய அரசர் மரபில் எவரும்இன்மையின் மூர்த்திநாயனார் என்பவர் மதுரை மாநகர்க்கு அரசராக அந் நகரினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி கல்லாடம் 57 ஆஞ் செய்யுளில் நுவலப்படுதலானும், அம் மூர்த்தி நாயனாரது அரசு கடுங்கோனுக்கு முன் ஆறாம் நூற்றாண்டின் முற்பாதியில் நடைபெற்றதாகல் வேண்டுமாத லானும் என்பது. மேலும் 'வஜ்ரநந்தி' என்னுஞ் சமண்முனிவர் கி.பி. 470 ஆம் ஆண்டில் மதுரையின் கண்ணே ஒரு தமிழ்ச்சங்கம் நிலைபெறுவித்தா ரென்னும் வரலாற்றின் உண்மையை நோக்குங்கால், சமண் மதத்தவனாகிய கருநட அரசனது ஆட்சி மதுரையில் அப்பொழுது நிலை பெற்றிருந்தமையும் சமண் மதத்தினர் கூட்டம் அங்கு மிக்கிருந்தமையும் நன்குபுலனாம். தம்மதத்தினர் தொகைப் பெருக்கமும், தமது முயற்சி பயன் படுதற்குத் தம் அரசனது உதவியும் இருந்தாலன்றிச், சைவர்கள் மிகுந்துள்ள அந்நகரில் ஒரு சமண்முனிவர் அங்ஙனம் தமிழ்க்கழகம் நிலைநிறுத்தல் இயலாதாகலின், அவ்வைந்தாம் நூற்றாண்டின், பிற்பாதி முடிய மதுரையிற் கருநட அரசரது

ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/17&oldid=1590439" இலிருந்து மீள்விக்கப்பட்டது