உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

9

ஆட்சி யிருந்தமை தேற்றமாம். அற்றாயினுங், கி.பி.நான்காம் நூற்றாண்டின் றொடக்கத்திலேயே கருநட அரசரது ஆட்சி மதுரையில் நிலைபெற் றிருப்பவும், அப் போதே அத்தகையதொரு தமிழ்ச்சங்கம் அங்கு ஏற்படுத்தப்படாமல், ஏறக்குறைய அவரதுஆட்சியின் முடிவுக்காலமாகிய ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிற்பகுதியில் அஃது ஏற்படுத்தப்பட்ட வாறென்னையெனின்; மதக்கோட்பாட்டிற் சமணராயும் பேசும்மொழியில் வடுகராயும் உள்ள இவ் வேற்று நாட்டரசர், சைவ சமயத்தவராய்ப் பண்டுதொட்டுச் செந்தமிழ் வழங்குவார் நிறைந்த பாண்டிநாட்டுட் புகுந்து அங்கு வழிவழி ஆண்ட பாண்டியரரசை வௌவித் தமதரசை நிலைபெறுத்தல் வேண்டினராயின், தம் அரசர்பால் நேயம் நிரம்பவைத்த தமிழ்க்குடிகட்கும் அப்புதிய கருநட அரசர்க்கும் எத்துணைப் போராட்டம் எவ்வளவு காலம் நிகழ்ந்திருத்தல் வேண்டும்! இப்போராட்டங்களெல்லாந் தணிந்து அப் புதிய அரசரும், இப் பழைய தமிழ்க்குடிகளும் ஒருமைப்படுதற்கும், அவருடன் போந்து குடியேறிய சமண்மதத்தவரும் இங்கிருந்த சைவரும் ஒருங்குகூடித் தமக்குள்ள வேறுபாடுகளை நிரவிக் கொள்ளு தற்கும் ஏறக்குறைய ஒன்றரை நூற்றாண்டுகள் சென்றிருக்க வேண்டுமாகலின், வஜ்ரநந்தி என்பார் வகுத்த தமிழ்ச்சங்கம் அவ்வாறு அக் கருநட அரசரது ஆட்சிக்கால முடிவைநோக்கி எழுதுவ தாயிற்றென்க. மேலும்அவ்வரசர் தமிழுக்குந் தமிழ்க் கொள்கைக்கும் புறம்பானவராகலின், அவர் பாண்டி நாட்டைக் கைக்கொண்ட காலத்திற் கடைச் சங்கம் மதுரையிலிருந்தாலும் அவர் அதனைப் பாதுகாத்திரார். அன்றி அதனைப் பாது காத்திருந்தனராயின், வஜ்ரநந்தி என்னுஞ் சமண்முனிவராற் புதியதொரு தமிழ்க்கழகம் நிலைநாட்ட வேண்டுவதும் இன்றாம். அதுவேயும் அன்றி, இங்குள்ள பழந்தமிழ்ப் புலவரைக்கொண்டு ஒரு தமிழ்க் கழகம் புதுக்காமல், தம் மதத்தவராகிய வஜ்ரநந்தியைக் கொண்டு அங்ஙனம் அதனை நிறுவினமையாலும், அவ்வரசர் இங்கிருந்த தமிழ்ப் புலவர்பால் அன்புடையரல்ல ரென்பது பெற்றாம். பெறவே, கருநட அரசரது ஆட்சி மதுரையிற் றுவங்கிய கி.பி. நான்காம் நூற்றாண்டிலும், அதற்குப் பின்னுங் கடைச்சங்கம் அங்கிருந்ததில்லை யென்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/18&oldid=1590443" இலிருந்து மீள்விக்கப்பட்டது