உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

  • மறைமலையம் - 24

விளங்குதல் காண்க. அங்ஙனமே அவர் வருதற்குமுன் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் நடைபெற்ற பாண்டிய அரசு மழையின்மை யானும் நோயானும் அரசியற் குழப்பங்களானும் பெரிதும் வலிகுன்றி வருந்தினமையின், இரண்டாம் நூற்றாண்டில் மதுரை எரியுண்டமையாற் கலைந்த கடைச் சங்கப் புலவரை அது மீண்டும் ஒருங்குகூட்டி அதனை நடைபெறுவிக்க மாட்டாதாயிற்று; ஆகவே, கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலுங் கடைச்சங்கம் மதுரையில் இருந்திலாமை தெளியப்படும்; படவே, கடைச்சங்ககாலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் அது முடிவெய்துதற்குமுன் நிகழ்ந்ததாகுமெனக் கடைப் பிடித்துணர்ந்து கொள்க. இவ்வாறு கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டின் நடுவெல்லை காறும் நிகழ்ந்த பல்வேறு மாறுதல் நிகழ்ச்சிகளை வரலாற்று முறையின் நன்காய்ந்துணராமற் ‘சேரன் செங்குட்டுவன்' நூலாரும், அவரைப் பின்பற்றித் 'தென்னிந்திய சைனமத ஆராய்ச்சி’ நூலாருங் கடைச்சங்கம் இருந்தது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலே யாம் என் றுரைத்தவுரை உண்மை வரலாற்றுடன் மாறுகொள்ளும் போலியுரையாமென உணர்ந்துகொள்க.

இனிச், சோழன் கரிகாலன் காலத்தும் அதற்கு முன்னும் இருந்த மாமூலனா ரென்னும் ஆசிரியர் அகநானூற்றில் பாடிய, வெல்கொடித், துனைகாலன்ன புனைதேர்க் கோசர்

தொன்மூ தாலத்து அரும்பணைப் பொதியில் இன்னிசை முரசங் கடிப்பிகுத் திரங்கத்

தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர் பணியா மையிற் பகைதலை வந்த மாகெழு தானை வம்ப மோரியர் புனைதேர் நேமி யுருளிய குறைத்த இலங்குவெள் ளருவி அறைவாய்

(251)

என்னுஞ் செய்யுட்களில் வடநாட்டிலிருந்த மோரிய அரசர் தென்னாட்டின்மேற் படையெடுத்துவந்த ஞான்று, “மோகூரில்' இருந்த தமிழ் மன்னன் அவரைப் பணிந்து அவர்க்குத் திறைகொடாமையின் அவனது ஊரின் வடவெல்லையில் அரணாய்த் தடைசெய்திருந்த மலைப் பாறையைக் குறைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/19&oldid=1590448" இலிருந்து மீள்விக்கப்பட்டது