உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 3

11

மட்டமாக்கித் தாம் வருதற்கு வழியுண்டாக்கினர் என்னும் வரலாறு கூறப்பட்டிருத்தலை, அவ் விருவரும் எடுத்துக்காட்டி, இதன்கட் குறிப்பிடப்பட்ட மோகூர்மன்னன் என்பான், சேரன் செங்குட்டுவனால் தோல்வியுற்ற ‘பழையன் மாறனே” யாதல் வேண்டுமெனவும், அவ்வாறாகவே மாமூலனார் சேரன் சங்குட்டுவன் காலத்தவராகவும் பெறப்படுதலின் அவராற் சொல்லப்பட்ட மோரியரது படையெடுப்பு இச் சேரவேந்தன் காலத்திலேயே நிகழ்ந்ததாகல் வேண்டுமெனவுங், கிறித்து பிறப்பதற்கு முந்நூறு ஆண்டுகளுக்குமுன் வடநாட்டில் அரசுபுரிந்த ‘சந்திரகுப்த' அரசனே மோரியமரபுக்கு முதல்வனாகலின் அவனாவது அவன்றன் மகன் ‘பிந்துசார’ னாவது சேரன்செங்குட்டுவன் காலத்தில் தென்னாட்டின்மேற் படையெடுத்துவந்தா ரென்பது பொருந்தாதெனவும், கிறித்துவுக்குப்பின் முதல்வனான மற்றொரு 'சந்திரகுப்த' னின் மகனான ‘சமுத்ரகுப்தன்' என்பவனே தென்னாட்டிற் காஞ்சிநகர் வரையிற் படையெடுத்து வந்தமை வரலாற்று நூல்களால் நன்கறியக் கிடத்தலின் இங்ஙனம் வந்த இக்குப்த மரபினரையே மாமூலனாரும் அவர் காலத்திருந்த ஏனைப் புலவர் சிலரும் பிழைபாடாக ‘மோரியர்’ என்று கூறினரெனவும், ஆகவே இக் குப்தமரபினர் படை யெடுப்பைக் குறிப்பிட்ட மாமூலனாரும் அவரோடுடனிருந்த மற்றைக் கடைச்சங்கப்புலவரும் அவர் தமிழாராய்ந்த கடைச்சங்கமு மெல்லாங் கி.பி.நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேனும் ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியிலேனும் இருந்ததாகல் வேண்டுமெனவும் உரை நிகழ்த்தினார். இவை தம்மை யாராய்ந்து இவருரைத்த இவ்வுரை பொருந்தாமை காட்டுவாம்.

முதற்கண் ஆராயற்பாலது, மோரியர் தமிழ்நாட்டின் மேற்படையெடுத்துவந்த ஞான்று அவரொடு பகைத்து அவரைப் பணியாமல் இருந்தோன் ‘பழையன்மாறன்’றானோ என்பதேயாம். ஆசிரியர் மாமூலனார் தாம் பாடிய அகநானூற்றுச் செய்யுட்கள் இரண்டில்மட்டும் 251, 281)‘மோரியர் தென்னாட்டின்மேற் படையெடுத்துவந்த செய்தியினைக் குறித்திருக்கின்றார்; அவ் விரண்டுள்ளும் மேலே காட்டிய செய்யுளில் மட்டுமே மோகூர் மன்னன் அம்மோரியரைப் பணியாமை கூறினார்; இங்ஙனங் கூறியவழி வறிதே 'மோகூர்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/20&oldid=1590453" இலிருந்து மீள்விக்கப்பட்டது