உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

12

  • மறைமலையம் - 24

என்று மொழிந்தனரே யன்றி,அம்மன்னன்பெயர் ‘பழையன் மாறன்' என்று மொழிந்தனரல்லர். அங்ஙனமிருக்க மோரியர் வந்த ஞான்று மோகூரில் அரசியற்றினோன் பழையன் மாறனே யென்று 'சேரன் செங்குட்டுவன்" நூலார் கூறுதற்குச் சான்றென்னை? இம்மோரியரது வரவினை அகநானூற்றிற் கூறிய (99) மற்றொரு புலவர் பரங்கொற்றனாராவது, அதனைப் புறநானூற்றிற் கூறிய (175) ஆத்திரையனாராவது அம் மோரியரைப் பகைத்துப் பணியாதிருந்தோன் பழையன் மாறனே யென்று கூறினரா? அங்ஙனம் ஏதும் இல்லையே. அற்றன்று,

பழையன் மோகூர் அவையகம் விளங்க நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன

(508, 509)

என்று மதுரைக்காஞ்சியுட் சொல்லப்படுதலின், அப்போது மோகூரிலிருந்தோன் பழையன்மாறனே என்பது பெறப்படுமா லெனின்; இம் மதுரைக்காஞ்சியுட் சொல்லப் பட்டதுகொண்டு, அதனை யியற்றிய 'மாங்குடி மருதனார்’ காலத்தில் மோகூரிலிருந்தோன் 'பழையன்' என்பது மட்டும் பெறப்படுமே யல்லாமல் மோரியர் வந்த காலத்தும் அவ்வூரிலிருந்தோன் பழையனேயென்பது பெறப்படா தாகலின், அவ்வாறு கொள்ளுதல் பொருந்தாதென மறுக்க. அஃதொக்குமாயினும், கரிகாற்பெருவளத்தான் காலத்திற்கும் முற்பட்ட ‘தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன்' காலத்தில் மோகூரிற் ‘பழையன்' என்னுஞ் சிற்றரசன் ஒருவன் இருந்தமை நுவலப் பட்டவாறுபோலவே, அப் பாண்டி யனுக்கு ஒரு நூற்றாண்டு பிற்பட்டிருந்த ‘சேரன் செங்குட்டுவன்” காலத்தும் மோகூரிற் ‘பழையன்' என்பான் ஒருவன் இருந்தமை பதிற்றுப்பத்தின் 44, 49 ஆஞ் செய்யுட்களினும் 50 ஆஞ் செய்யுளின் பதிகத்தினும் நுவலப்பட்ட வாறென்னையெனின்; ஒருவன்தன் தந்தையின் பெயரைத் தன் மகற்கிட்டு வழங்குதல் பண்டுதொட்டு இத் தென்றமிழ் நாட்டின்கண் நடைபெற்றுவரும் வழக்கென்பது “சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே” என்பதனால் நன்குணரக் கிடத்தலின், மாங்குடி மருதனார் காலத்தில் மோகூரிலிருந்த ‘பழையன்' பாட்டன் ஆவன் எனவும், சேரன்செங்குட்டுவன் காலத்தில் அதன்கணிருந்த 'பழையன்' அவற்குப் பேரன் ஆவ னனவும் பகுத்தறிந்து கொள்க. இவ்வாறு பகுத்தறிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/21&oldid=1590458" இலிருந்து மீள்விக்கப்பட்டது