உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

13

மாட்டாமையிற் ‘சேரன்செங்குட்டுவன்' நூலாரும் அவரைப் பின்பற்றிய சமண் நூலாரும் அவ் விருவேறு 'பழையரை’யும் ஒன்றுபடுத்திச் செய்த குழப்பங்கள் சாலப்பல.

66

அற்றாயினும், 'நான்மொழிக்கோசர்”

என்பார்

மோரியரொடு சேர்ந்து அவர்க்கு முற்படையாய்ப் போந்து 'மோகூர்ப் பழையனைத்'தாக்கின வரலாற்றை மேலெடுத்துக் காட்டிய செய்யுளில் மாமூலனார் கூறியிருத்தல் கொண்டும், அங்ஙனமே ‘மதுரைக் காஞ்சியில்' மாங்குடி மருதனார் கூறியிருத்தல் கொண்டும் மோரியர் கோசரை முன்னணியாய் விடுத்துத் தாக்கியது மோகூரிலிருந்த பழையனையேயாம் என்று அச் ச் சமண்மத ஆராய்ச்சி நூலார் உரைத்தது பொருத்தமே யாமெனின்; அது பொருத்தமன்று ஆசிரியர் மாமூலனார் தாம் பாடிய அகநானூற்றுச் செய்யுள் மற்றொன்றில் (281),

என

கனைகுரல் இசைக்கும் விரைசெலற் கடுங்கணை முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர்

தென்றிசை மாதிரம் முன்னிய விரவிற்கு

முன்றுணையாய்க்கொண்டு

மோரியர் வடுகரை முன்றுணையாய்க் கொண்டு வந்தனரென்று மொழிந்தாற்போல, அவர் கோசரையும் வந்தனரென யாண்டும் மொழிந்தார் அல்லர். ஏனைத் தமிழாசிரியராதல் அக் கோசரை மோரியர்க்குத் துணைவரென்றேனும், பழையன் மாறனை அவர் தாக்கினாரென்றேனும் யாண்டுங் கூறக் காண்கிலேம். மற்று, அக்கோசர் "பழையன் மோகூர் அவையகம் வயகம் விளங்கத் தோன்றின” ரெனவே மதுரைக்காஞ்சி புகலாநிற்கின்றது; அவர் பழையனுக்குப் பகைஞராய்ப் புகுந்தனரென்றால், அவனது அவையகம் அழியப்புகுந்தன ரென்றன்றோ கூறுதல் வேண்டும், அவ்வாறின்றி அவனது அவையகம் விளங்கப் புகுந்தனரென்று கூறுதல் ஒக்குமோ? மற்று அஃது அவர் அவனது அவையகம் விளங்கப் புகுந்தனரென்றுரைக்கும் பரிசினை உற்றுநோக்கும்வழி, அக்கோசர் மோகூர்ப் பழையனுக்கு நண்பரே யல்லாமற் பகைஞரல்லரென்பது இனிது புலனாதலின், அவரை மோரியர்க்குத் துணைப்போந்தாரென்பது பெரியதொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/22&oldid=1590462" இலிருந்து மீள்விக்கப்பட்டது