உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

  • மறைமலையம் - 24

இனிய

பிழைபாட்டுரையாம். அற்றேல், மாமூலனார், “வெல்கொடித், துனைகாலன்ன" என்று பாடிய மேற்காட்டிய செய்யு ளடிகட்குப் பொரு ளென்னையெனின்; “வென்றெடுத்த கொடியினையும், விரைந்து செல்லுங் காற்றையொத்த ஒப்பனைசெய்த தேரினையும் உடைய கோசரது பழையதாய் முதிர்ந்த ஆலமரத்தின் கேடில்லாத கிளைகளின் கீழுள்ள அம்பலத்தின்கண்ணே, இசையையுடைய முரசங் குறுந்தடியால் அறையப்பட்டு ஒலிக்கப், பகை மேற்கொண்டு வந்து ஓரிடத்தும் நிலை பெறுதலில்லாத மோரிய அரசர் தமக்குப் பகையாய அக்கோசரது போர் முனையை அழித்தநாளிலும் மோகூர் மன்னன் தமக்குப் பணியாமை கண்டு யானை குதிரைகளையுடைய தமது படையின் புனைதேர் உருள்கள் அவனது ஊர்மேல் தடைப்படாது உருண்டுசெல்லும் பொருட்டு மட்டமாக்கிய, விளங்கும் வெள்ளிய அருவிகள் இழியும் மலைப்பாறைகளிடத்து” என்பதே மேலெடுத்துக் காட்டிய அவ் வடிகட்குப் பொருளாகும். இதனால், வடக்கிருந்து வந்த மோரியஅரசர், தெற்கின்கண் உள்ள கோசரது ஆலமரத்தின்கீழுள்ள அம்பலத்தின் கண்ணே அக்கோசரொடு பொருது அவரைத் தோல்விபெறச் செய்தா ரென்பதூஉம், தமக்குத் துணைவரான கோசர் தோல்வியுற்றதைக் கேட்டும் அஞ்ஞான்று மோகூரிலிருந்த மன்னன் அஞ்சி அம்மோரிய அரசரைப் பணியாமையின் அவனையுந் தாக்குதற் பொருட்டுப் படையெழுந்த அம்மோரியர் இடையே தடையாய் நின்ற மலைப்பாறைகளை மட்டமாக்கி வழியுண்டாக்கின ரென்பதூஉம் பெறப்படுகின்றன அல்லவோ? மாமூலனார் கூறிய கோசர் மோகூர் மன்னர்க்கு வழிவழி நண்பரென்பது இவர் கூறியவாற்றானேயன்றி, 'மதுரைக் காஞ்சி'யில் மாங்குடி மருதனார் கூறியவாற்றானும் பெறப்படுதல் காண்க. மேலும், இக்கோசர் என்பார் வாய்மையிற் றவறாத படைமறவ ரென்பதும், துளுநாட்டையும் செல்லூரையும் ஆலமரத்துப் பொதியிலையுங் கொங்குநாட்டையும் இருப்பிடமாகக்கொண்டு வாழ்தல் பற்றி "நாலூர்க்கோசர்” (குறுந்தொகை, 15) “நான்மொழிக்கோசர்”4 (மதுரைக்காஞ்சி 509)என்று வழங்கப்படுவரென்பதும் பழைய நூல்களால் நன்கறியக்கிடக்கின்றன ஆகவே, இக்கோசரை முன்றுணையாகக்கொண்டு மோரிய அரசர்

மோகூர்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/23&oldid=1590467" இலிருந்து மீள்விக்கப்பட்டது