உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 3×

15

பழையனைத் தாக்கினாரென அச்சமண்மத ஆராய்ச்சி நூலாரும் பிறரும் உரைத்தவுரை பழையநூற் சான்றுகளுக்கு முற்றும் முரணாதலின்அது கொள்ளற்பால தன்றென மறுக்க.

இனி, இந்நாலூர்க்கோசர் மோகூர் மன்னர்க்கு வழிவழி நண்பரென்பது மேற்காட்டியவாற்றால் நன்குவிளங்குதலின், மாமூலனார் தாம் பாடிய அகநானூற்றுச் செய்யுள் 251 இல் அக் கோசரையும் மோரிய அரசரையும் மோகூர் மன்னனையும் ஒருங்கெடுத்துக் கூறுதல் ஒன்றேகொண்டு, அக்கோசரொடு தொடர்புடையோன் மோகூரில் ஒரு காலத்தி லரசாண் பழையனே என்றல் ஒருசிறிதும் பொருந்தாது. அக் கோசர்தம் மூதாதைகளும் மோகூர் மன்னர்தம் மூதாதைகளும் நட்பிற் பிணிப்புண்டோராதல் பற்றிய, அவ் விருவர்தம் வழித்தோன் றினாரும் அங்ஙனம் நட்புரிமையிற் சிறந்து விளங்கினர்; ஆதலாற், கோசர் என்பாரின் தொடர்பு காணப்படுதல் ஒன்றேகொண்டு, மாமூலனார் கூறிய மோகூர் மன்னன் பழையனேயென்று முடிபு கட்டுதல் பெரியதொரு பிழைபாடாமென்க. மற்று,மோரியர் படையெடுத்துத் தன்மேல் வந்த காலத்து அவரைப் பணியாதிருந்த மோகூர் மன்னன் இன்னானென்று மாமூலனார் அவனது பெயரையெடுத்து மொழிந்திடாமையின், அம் மோரிய அரசர் வந்த காலத்தில் மோகூரிலிருந்தோன் L பழையனுக்குப் பல தலைமுறை முற்பட்டோன் ஆவனென்பதே துணிபொருளாமென்க.

மேலும், அம் மோரிய அரசர் தென்னாட்டின்மேற் படையெடுத்து வந்தசெய்தியை மாமூலனார் தங்காலத்து நிகழ்ந்ததென நிகழ்காலத்தின் வைத்துரையாமல், “தெம் முனை சிதைத்த ஞான்றை” எனவுங், “குறைத்த”எனவும் இறந்த காலத்தின் வைத்துரைத்தலிற் கி.பி. முதல் நூற்றாண்டின் முற்பாதியிலிருந்த அம் மாமூலனார்க்கு முந்நூற்றாண்டு முற்பட்டிருந்த மோரிய அரசனான பிந்துசாரனே அங்ஙனம் படையெடுத்து வந்தவனா மென்பது தெளிபொருளாகும். அதுவேயுமன்றிச் ‘சந்திரகுப்தன்' என்னும் முதல் மோரிய அரசற்குமுன் பாடலிபுரத்திற் (கி.மு.413) இல் அரசாண்ட நந்த அரசர் கங்கையாற்றின் அடிப்படையில் ஒளித்துவைத்த நிதியத்திரளை அம் மாமூலனாரே அகநானூற்றில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/24&oldid=1590472" இலிருந்து மீள்விக்கப்பட்டது