உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

மறைமலையம் - 24

‘நன்னூல்', ‘சூடாமணிநிகண்டு', முதலிய நூல்களின் கடவுள் வாழ்த்துச் செய்யுட்களே சான்றாம். மற்றுத், தொல்ாப்பிய னாரோ தமது நூன் முகத்தில் அங்ஙனம் புத்தனையாதல் அருகனை யாதல் வணங்கக் காணாமையானும், அவர் அருளிச்செய்த பெரு நூலாகிய ‘தொல்காப்பியத்’துள் ஓரிடத்தாயினும்,புத்தக்கடவுள் அருகக்கடவுள் அவர் வகுத்த பௌத்த சமண் மதங்கள் முதலாயினவற்றைப் பற்றிய ஒருசிறு குறிப்புத் தானுங் காணப் படாமையானும், அவ் வாசிரியர் அதன்கட் கூறுங் கொள்கைக் குறிப்புகளெல்லாம் பண்டைக்காலத்தில் இப் பரதநா டெங்கணும் பரவியிருந்த தமிழ்ச் சைவ அந்தண முனிவரின் ஒழுகலாறுகளையும் அவர் தமக்குரிய சைவக் கோட்பாடுகளையும் தழீஇ நிற்றலானும் அவ்வாசிரியர் பௌத்த சமண்மதங்கள் தோன்றுவதற்குப் பல்லாயிர ஆண்டு முற்பட்டிருந்தவராதல் ஒரு தலையேயாம். என்றித் துணையும் ஆராய்ந்து காட்டியவாற்றாற் ‘படிமை' என்னுஞ் சொல்லாற் குறிக்கப்பட்ட தவ வொழுக்கம் பண்டைத் தமிழ்ச் சைவ அந்தணரின் தாபத் வொழுக்கத்தையே குறிக்கு மென்பதூஉம், அதற்கு முதலான‘ப்ரதிமா' என்னுஞ்சொற் பழைய எசுர்வேதத்தின்கண்ணேயே காணப்படுதலின் அஃதறியாது அதனைச் சமண் மதத்தவர்க்கே உரிய சொல்லாக வரைந்து வைத்து அவ்வாற்றால் தொல்காப்பி யனாரைச் சமண் சமயத்தின் பாற்படுக்கலாயினாருரை நுணுகி விரிந்த ஆராய்ச்சியுணர்

வில்லாதார்தம் போலியுரையா மென்பதூஉம்,தொல்காப்பியனார் ஒன்று முதல் ஆறறிவு ஈறாக வைத்து உயிர்களை ஆறு தாகுதியில் அடக்கியமுறைக்கும், சமணர் நிலன் நீர் நெருப்பு காற்று என்னும் நான்கிடவகையில் வைத்து உயிர்களைப் பகுத்த முறைக்கும் வேற்றுமை சாலப் பெரிதாகலின் அவ் வியல்புக ளெல்லாம் பழைய சமண்நூல் மேற்கோள்கள் கொண்டு முற்ற ஆராய்ந்து பாராது நுனிப்புல் மேயும் யாடுபோல் தாம் அறிந்த சிறிதையே பெரிதாக மயங்கி அம் மயக்க வுணர்ச்சியால் தொல்காப்பியனாரைச் சமண ரென்றாருரை பொருந்தா தென்பதூஉம், அதுகொண்டு அவர் நூற்றாண்டிலிருந்தாரெனல் போலியுரையா மென்பதூஉம் நன்கு

விளக்கப்பட்டன.

கி.மு.

3

ஆம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/129&oldid=1590751" இலிருந்து மீள்விக்கப்பட்டது