உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

119

பழைய சமண் நூல்களினெல்லாம் நிலன் நீர் தீ வளி என்னும் நாற்பெரும் பொருள்களே சொல்லப்பட்டன வல்லாமல், அந் நான்கின் வேறான ‘விசும்பு' (ஆகாயம்) ஒன்று உளதென்பது கூறப்படவில்லை. உத்தராத்தியயனத்திற் கூறப்படும் இடைவெளி ஐம்பெரும் பொருள்களிற் சேர்ந்தன்று; அஃது ஆண்டு ‘ஆ ஆகாச மெனக் கூறப்படாமல் 'நபஸ்” எனக் கூறப்படுதலே அதற்குச் சான்றாம். மற்று, ஆசிரியர் தொல்காப்பியனாரோ,

நிலந் தீ நீர் வளி விசும்போடு ஐந்துங்

கலந்த மயக்கம் உலக மாதலின்

(மரபியல், 89)

என்பதனால் ‘விசும்பு' என ஐந்தாவதொரு பொருள் உளதென அருளிச்செய்கின்றார். சமண் நூலார் மக்களையுந் தேவர் நரகர்களையும் ஐயறிவுடைய உயிர் வகைகளில் அடக்கி,

வானவர் மக்கள் நரகர் விலங்குபுள்

ஆதி செவியறிவோடு ஐயறி வுயிரே

(நன்னூல், உரியியல், 8)

எனக் கூறாநிற்பர்; உத்தராத்தியயன நூலும் இங்ஙனமே கூறாநிற்கும். இவ்வைந்தறிவின் வேறாக ஆறாவது மனவறிவு ஒன்று உண்டென்பது பழைய சமண் நூல்களிற் காணப்பட வில்லை; பிற்காலத்து நூல்கள் மேற்கோள்கள் ஆகா. மற்று, ஆசிரியர் தொல்காப்பியனாரோ, மக்களினுங் கீழ்ப்பட்ட மாவும் மாக்களுமே ஐயறிவினவா மென்பதும், மக்களோ ஆறறிவினராவ ரென்பதும் போதா.

மாவு மாக்களும் ஐயறி வினவே

எனவும்,

(மரபியல், 32)

மக்க டாமே ஆறறி வுயிரே

(மரபியல், 33)

எனவுந் தெற்றென மொழிகின்றார். மேலும், புத்தசமண் ஆசிரியர் தாம் இயற்றும் நூல்களின் முகப்பில் புத்தனை ஆசிரியர் ஆ அருகனையும் வணங்காதிரார்.எல்லாச் சமயத்தவரும் எடுத்துப் பயிலும் இலக்கணம் நிகண்டு முதலான பொது நூல்களை ஆக்கும் வழியும் புத்தர் சமணர் அந் நூல்களின் முதலிற் புத்தக்கடவுள் அருகக்கடவுளுக்கு வாழ்த்து உரையாதிரார்.இதற்கு ‘வீரசோழியம்', 'யாப்பருங்கலம்', 'யாப்பருங்கலக்காரிகை”,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/128&oldid=1590750" இலிருந்து மீள்விக்கப்பட்டது