உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

  • மறைமலையம் - 24

பண்டைச் சமணாசிரியர்களாலன்றிப் பின்றைச் சமண புலவரால் அவர் தம் பழைய கோட்பாட்டுக்கு முரணாகக் கைக்கொள்ளப்பட்டதாதலும் அங்கையங் கனிபோல் இனிது விளங்காநிற்கும். உயிர்களை அறிவுவகையாற் பகுத்தல் சமண் கோட்பாட்டிற்கு இசைந்து அதற்கு ஏதொரு பயனும் பயவாமையாலும், அவை தம்மை இடவகையாற் பகுத்தல் பெரிதும் ஒத்து அதற்குப் பயன்படுதலாலும், அதற்கிணங்கவே பழைய ‘ஆசாரங்க சூத்திரமும்' உயிர்களை இடவகையாற் பகுத்தே விரித்துரைத் தலாலும், பண்டைக்காலத்துச் சமண் நூலாசிரியர்க்கு உயிர்களை அறிவுவகையாற் பகுத்தல் கோட்பாடன் றென்பது துணிந்துகொள்ளப்படும். ஆகவே, “ஆசாரங்க சூத்திரத்தைப்

அதன்

போல்,

கோட்பாட்டொடு

உயிர்களை

ஒரு சிறிதாயினும் L டவகையாற் பகுத்தோதாத ஆசிரியர் தொல்காப்பியனார் சமண் சமயத் தவரால் யாண்டையதென மறுக்க. ஆசிரியர் தொல்காப்பியனார் சொற்பொருளாராய்ச்சியில் ஆழச்சென்று, அச்சொற்பொரு ளிலக்கணப் பரப்பெல்லாம் நுணுகி யறிந்தெடுத்து விளக்கி முடிக்கின்றுழி, உலகின்கட் காணப்படும் உயிர்த்தொகுதி களெல்லாந் தத்தமக்கு இயல்பாக அமைந்த ஒன்று முதல் ஆறு ஈறான அறிவுகள் விளங்குதற்கேற்ற உடம்புகளின் வைகி உயிர்வாழுமாற்றைத் தமது நுண்மாண் நுழைபுலத்தாற் கண்டறிந்து, அறிவான் மிக்க சான்றோரெல்லாங் கண்டு வியந்து பாராட்டும்படி அவற்றை அறுவகைப்படுத்தோதித் தமதொப்புயர் வில்லா இலக்கணக் களஞ்சியத்தைக் கட்டி முடித்தார். ங்ஙனம் உயிர்களை அறிவுவகையால் அறுவகைப்படுத்து விளக்கல் இலக்கண ஆராய்ச்சியின்பாற் படுவதல்லது, ஒரு சமயக் கோட்பாட்டின்பாற் படுவதன்றாம். உயிர்களை இடவகை யாற் பகுத்தலோ சமண் கொள்கைக்குப் பெரிதும் பயன்படுவதாகும். இவ்வாறு ஒன்றினொன்றியையாத ருவேறு பாகுபாடுகளின் இயல்பும் பயனும் அறிந்து பாராமல், தொல்காப்பியனாரைச் சமண் சமயத்தின்பாற் படுக்கப் புகுந்தார்தம் அறியாமையின் வலிவை என்னென்பேம்! அதுகிடக்க.

இனித், தொல்காப்பியனார் சமண்சமயத்தின ரல்லரென்பதற்குப் பின்னுஞ் சில சான்றுகள் காட்டுதும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/127&oldid=1590749" இலிருந்து மீள்விக்கப்பட்டது