உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 3

117

அதற்குச் சிறிதும் பயன்படுவதன்றாம்; என்னை? ஈரறிவுடைய வாயினும் அல்லது ஐயறிவுடையவாயினும் எல்லாவுயிர்க்கும் ன்பதுன்பமும் அச்சமும் உடையவாகையால், அறிவின் ஏற்றத்தாழ்வு கருதாது எல்லாவுயிர்களையும் பாதுகாத்தலே சயற்பால தென்பதூஉம், தன்பதூஉம், உயிர்கள் ஓரிடத்தும் உள ஓரிடத்தும் இல என அறியாமையாற் கருதிவிடாது நிலன் நீர் நெருப்பு காற்று என்னும் நான்கிடங்களிலும் அவை உளவாதலைக் கருத்தூன்றி யாராய்ந்து பார்த்தல் இன்றியமையாததென்பதூஉம் அவர்தங் கருத்தாகலி னென்க. எனவே, உயிர்களை இடவகையால் ஆராய்தலே பண்டைச் சமணாசிரியர் கோட்பாடாகுமல்லது அறிவு வகையால் ஆராய்தல் அவர்தம் கோட்பாடாகாமை பெற்றாம். பெறவே, உயிர்களை இடவகையாற் பகுத்து விரித்துக் காட்டிய பழைய ஆசாரங்க சூத்திரத்திற்கு மாறாக, அவை தம்மை வகையாலும் அறிவு வகையாலும் பகுத்து விரித்துரைத்த உத்திராத்தியயனநூல் (34) மிகவும் பிற்பட்ட காலத்தெழுந்த சமண்முனிவரால் தொல்காப்பியத்தைப் பார்த்துச் சய்யப்பட்ட தொன்றாக வேண்டுமாகலின், அஃது ஈண்டைக்கு மேற்கோளாகாதென மறுக்க. ஆசாரங்க சூத்திரத்திற்குச் சீலாங்க முனிவர் எழுதியவரை கி.பி. 876 இ முடிக்கப்பட்ட தொன்றாகையால்,3” ஆசாரங்க சூத்திரத்தின் காலங் கி.பி. கி.பி. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டிற்கு மேற்பட்டதாகாது. 'உத்தராத்தியயனம்" சமண் நூல்களில் மிகப் பிற்பட்டதாதலும், அதன் இறுதிக் கண் உயிர்களை இடவகையாலும் அறிவுவகையாலும் பாகுபாடு செய்து விரித்தோதும் முப்பத்தாறாம் அத்தியயனம் இன்னும் பிற்பட்ட காலத்தே செய்து சேர்க்கப்பட்டதாதலும் மேற்குறிப்பிட்ட ஐரோப்பிய ஆசிரியரால் நன்கு விளக்கிக் காட்டப் பட்டிருக்கின்றன பழையதாகிய‘ஆசாரங்க சூத்திரம்’ முதற்கண் உயிர்களை இடவகையாற் பகுத்து விரித்தோதி அறிவுவகையாற் பகுத்தலை ஒரு சொற்றொ டரளவில் மிகச் சுருக்கிக் கூறாநிற்க, 'உத்தராத்தியயனமோ' இட டவகையான் மட்டுமேயன்றி அறிவு வகையாலும் உயிர்களைப் பகுத்து மிக விரித்தோதா நிற்கின்றது; இதனை உற்றுநோக்கவல்லார்க்கு, உத்தராத்திய யனத்தின் இவ் விறுதிப்பகுதி பெரிதும் பிற்பட்ட காலத்த தாலும், அறிவு வகையால் உயிர்களைப் பகுத்தோதுமுறை

40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/126&oldid=1590748" இலிருந்து மீள்விக்கப்பட்டது