உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

  • மறைமலையம் - 24

வலியுறுத்திப் பரவச் செய்ததில் ஏதும் புதுமையில்லை. அஞ்ஞான்றிருந்த அத்தமிழ் முனிவர், தங் காலத்திற்குப் பல்லாயிர ஆண்டு முன்னிருந்த ஆசிரியர் தொல்காப்பியனார் முதலான தமிழ்ச் சான்றோர் கண்டுரைத்த உயிர்ப் பாகுபாடுகளையே தாமுந் தழுவிக் கூறினாரல்லது, மகாவீரர் முதலாகப் பின்வந்த சமண்முனிவர் வகுத்ததனைக் கண்டு தொல்காப்பியனார் அவை தம்மைக் கூறினாரல்லர்.

அஃதெங்ஙனமெனிற் காட்டுதும்: எவ்விடத்திலுள்ள உயிரையுங் கொல்லலாகா தென்பதே சமணர்தங் கோட் பாடாகையால், அக் கோட்பாட்டிற்கு இசையவே உயிர்கள் உயிர்வாழும் இடங்களை அவர்கள் முதலில் ஆராய்ந் துரைப்பாராயினர். உயிர்கள் நிலத்திலுள்ளனவும், நீரிலுள்ளனவும், நெருப்பிலுள் ளனவுங், காற்றிலுள்ளனவும் என நால்வகைப் படுமென்று உரைத்து, ஆண்டாண்டுள்ள உயிர்களுக்கு நோயுஞ் சாக்காடும் உண்டாகாவண்ணம், அவற்றோடு இயைந்து காணப்படும் உயிரில் பொருள்களைத் தாம் பயன்படுத்திக் கொள்ளும் முறைகளை விளக்கிக் காட்டுதலே சமண்சமய ஆசிரியர் கருத்தாகும். இப்போதுள்ள சமண் நூல்களில் மிகப் பழையதாகிய ஆசாரங்கசூத்திரம், சுருதஸ்கந்தம், இரண்டு, மூன்று, நான்கு, ஏழாம் அத்தியாயங்களில், உயிர்கள் உலவுதற்கிடமான நிலன்நீர் நெருப்பு காற்று என்னும் இடவகையால் அவ்வுயிர்களை நால்வகைப்படுத்து, அவை தமக்கு இடர் நேராவண்ணம் அங்கங்குள்ள ஏனைப் பொருள்களைப் பயன்படுத்துமாறு விரித்துரைத்தல் காண்க; இதன் ஆறாம் அத்தியயனத்தில், ஈரறிவு மூவறிவு நாலறிவு ஐயறிவு உடைய எல்லா உயிர்களுக்கும் இன்ப துன்பமும் அச்சமும் உளவாகலின், அவை தமக்கு எந்த ஏதுவைக் கொண்டும் எவ்வகை இடருஞ் செய்தலாகா தென்னும் அத்துணையே வற்புறுத்துரைக்கப் பட்டிருக்கின்ற தல்லாமல், ஓரறிவு முதல் ஐயறிவு ஈறாக வைத்து உயிர்களைப் பாகுபாடு செய்தல் ஆண்டுங் காணப்படவில்லை. ஆகவே, உயிர்களை டவகையால் நால்வகைப்பட வகுத்துக் காட்டுதலே பண்டைச் சமண் ஆசிரியர்தங் கருத்தாதல் காண்டுமன்றி, அறிவுவகையாற் பகுத்துக்காட்டுதல் அவர்க்குக் கருத்தாதல் கண்டிலம். இடவகையாற் பகுத்தலேஅவர்தங் கோட்பாட்டுக்குப் பயன்படுவதன்றி, அறிவு வகையாற் பகுத்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/125&oldid=1590747" இலிருந்து மீள்விக்கப்பட்டது