உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

115

இனி, அவர், தொல்காப்பியரைச் சமண்சமயத்தினரென நாட்டுதற்கு மற்றுமொரு சான்று காட்டுவே மெனப் புகுந்து, உயிர்களை ஓரறிவுமுதல் ஐயறிவு ஈறாக உள்ள ஐந்து வகைகளிற் பகுத்தடக்குதல் சமண்சமயக் கோட்பாடாகு மென்றுந் தொல்காப்பியனார் இவ்வைவகை உயிர்ப் பாகுபாடுகளைத் தமது ‘மரபியற்’ சூத்திரங்களில் எடுத்தோதுதலின் அவர் சமண் சமயத்தவரேயாதல் வேண்டுமென்றுங் கூறினார். இதுவும் ஒரு சிறிது ஆராயற்பாற்று.

சமண் மதத்தவர்கள் எவ்வகைப்பட்ட உயிரையும் எவ்வகை ஏதுபற்றியும் கொல்லலாகாது என்னும் மிகச் சிறந்த கால்லா அறத்தைக் கடைப்பிடித்து நின்றவர்கள். வடநாட்டின்கண் வந்து குடியேறிய ஆரியரும் அவர் வழிச் சார்ந்த பார்ப்பனரும் வேள்வி வேட்டலை ஓர் ஏதுவாக வைத்துக்கொண்டு, எண்ணிறந்த விலங்கினங்களைக் கொன்று அவற்றின் ஊனை நெய்யிற் பொரித்து உண்டுஞ், சோமப் பூண்டில் இறக்கிய கள்ளை நிரம்ப அருந்தியும் வெறியாட் யர்ந்து வந்தமையால், இயற்கையிலேயே புலாலுங் கள்ளும் மறுத்த சைவவேளாள அரசர் (க்ஷத்திரியர்) அவ் வாரியர்தந் தீய ஒழுகலாற்றினை அருவருத்து, அதனைத் தடைசெய்தற் பாருட்டாகவே சமண் புத்தகக் காள்கைகளைத்

தோற்றுவித்து, அவற்றை எங்கும் பரவச் செய்தனர். சமண்மத ஆசியரான ‘மகாவீரரும்’ புத்தசமய ஆசிரியரான ‘கௌதம சாக்கியரும்” வடக்கே மகதநாட்டில் வைகிய க்ஷத்திரிய அல்லது தமிழ் வேளாள அரசமரபிற் பிறந்தோரே யாவர். ஆரியர் வடநாட்டிற் புகுந்து ஆங்காங்குக் குடியேறியபோது, அங்கம், மகதம், காசி, கோசலம், வச்சீ, மல்லை, சேதீ, வஞ்சம், குரு, பாஞ்சாலம், மச்சம், சூரசேனம், அச்சகம், அவந்தி, காந்தாரம், காம்போசம் முதலிய பதினாறு நாடுகளில் நாகரிகத்திற் சிறந்து விளங்கிய வேறு மரபினரான தமிழ் வேளாளரே அரசுபுரிந்தனர் என்பது அங்குத்தரநிகாயத்தில் (1, 213; 4, 252, 256, 260) செவ்வனே குறிக்கப்பட்டிருக்கின்றது. மகத நாட்டிலிருந்த தமிழர், முன்னரே யாம் விளக்கியெழுதிய பூருக்களைச் சேர்ந்தோராவர்.38 ங்ஙனமாகச் சமண் கோட்பாட்டைப் பரவச் சய்த மகாவீரர் தமிழரச முனிவரேயாகையால், அவர்க்கும் அக்காலத்திருந்த ஏனை வேளாளர்க்கும் பொதுவாக உரிய கொல்லா அறத்தைஅவர்

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/124&oldid=1590746" இலிருந்து மீள்விக்கப்பட்டது