உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

மறைமலையம் 24

தாபதர் சைவசமய அந்தண முனிவரேயாவரென்பதூஉந் தெற்றென விளங்காநிற்கும்.

அற்றேல், 'ப்ரதிமா”, ‘படிமை 'படிவம்' என்னுஞ் சொற்களுள் ஒன்றேனும், புத்தசமண் நூல்களுக்கு முற்பட்ட L பழைய வடநூல்களுள் உண்டே ா வெனின்; உண்டு. வடநூல்களுள் மிகப் பழையன இருக்கு, எசுர், சாமம் என்பவைகளேயாம். ஐயாயிர ஆண்டுகளுக்குமுன் தமிழர் ஆ ரியர் என்னும் இருவகுப்பினர்க்கும் ஆசிரியராயிருந்த முனிவர்களாற் பாடப்பட்டுச் சிதர்ந்துகிடந்த இவற்றின் பாட்டுகள் பாரதப் போர் முடிந்தபின் வியாசரால் ஒருங்கு தொகுக்கப்பட்டு இருக்கு, எசுர், சாமம் என்னும் மூன்று வேதங்களாக வகுக்கப்பட்டன. இவ்வேதப்பாட்டுகள் வழங்கிய காலத்தில் வணங்கப்பட்டு வந்த இந்திரன், வருணன், உருத்திரன் முதலான தெய்வங்களுக்கு உருவங்கள் சமைத்து வைத்து, அவற்றிற்கு வழிபாடு ஆற்றிவந்தனர் என்பதும் அவை தம்மைக் கருத்தூன்றி ஆராயும்வழி இனிது புலனாகின்றது. ஆரியர் போர்மேற் சென்ற காலங்களில் இந்திரனது வடிவத்தை எடுத்துச் சென்றனரென்பது இருக்குவேதத்திற் சொல்லப்பட் டிருக்கின்றது.37 சிவபிரான் திருவடையாளமான சிவலிங்க வடிவத்தைப் பண்டைத் தமிழ்மக்கள் வைத்துவழிபட்டமை இருக்குவேத ஏழாம் மண்டிலத்தின் பதிகத்திலும் பத்தாம் மண்டிலத்தின் தொண்ணூற்றொன்பதாம் பதிகத்திலும் விளக்கமாக வைத்து நுவலப்பட்டிருக்கின்றது. வையேயன்றி, 'ப்ரதிமா’ என்னுஞ் சொல்லே தெய்வம்போற் செய்த வடிவத்தைக் குறிக்கும் மொழியாக எசுர்வேதத்தில் “நதஸ்ய ப்ரதிமா அஸ்தி” (32, 3) என்று தெளிவாகக் கூறப்பட்டிருக் கின்றது. இவ் வுண்மைகளைச் சிறிதாயினும் ஆராய்ந்து பார்க்கும் அறிவு மதுகையின்றி, ‘ப்ரதிமா’ என்னுஞ் சொல் சமண் நூல்களி லன்றிப், பழைய வேதநூல்களில் யாண்டு மில்லை யென்று துணிந்துரைத்தவர் தம் பேதைமைப் பெருக்கை என்னென்பேம்! இனியேனும் அச்சொல் பௌத்த சமண் நூல்கள் தோன்றுதற்கு மூவாயிர ஆ ண்டு முன்னிருந்த எசுர்வேதத்திலேயே உளதென்றறிந்து அவர் உண்மை தெளியக்கடவாராக.

இருபத்தோராம்

ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/123&oldid=1590745" இலிருந்து மீள்விக்கப்பட்டது