உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

113

அற்றேலஃதாக, தவவொழுக்கமும் அதற்கேற்ற தவ வடிவமும் அதனை யுணர்த்தும் 'படிமை' என்னுஞ் சொல்லும், புத்தர் சமணர் தோன்றுதற்குப் பல்லாயிர ஆண்டுகள் முன்னரே சைவ அந்தணர்பால் உளவாயது உண்மையாயின், அதனை நிறுவுதற்குரிய பழைய நூன் மேற்கோள்கள் காட்டுக வெனின்; அவை தம்மைப் பண்டைத் தமிழ்நூல்களினின்றும் முன்னரே எடுத்துக் காட்டினாம். அப் பழந்தமிழ் நூல்கள் பாட்டுகளில் யாண்டும் புத்த சமண் சமயத்தவர் ஓரெட்டுணையுங் குறிக்கப்படாமையும், 'படிமை’, 'படிவம்’ என்னுஞ் சொற்கள் சைவ அந்தணரின் தவவொழுக்கத்தையே குறித்தற்கு அவற்றுள் வழங்கப்படுதலும் ஆண்டே விளக்கிப் போந்தாம். ஆகவே, புத்தர் சமணர் தோன்றுதற்கு மூவாயிர ஆண்டு முற்பட்டதாகிய தொல்காப்பியச் சிறப்புப்பாயிர வுரையிற் போந்த 'படிமையோன்' என்னுஞ்சொற் சைவ அந்தண முனிவனாகிய ஆசிரியன் தொல்காப்பியன் தவவொழுக் கத்தையுந் தவவடிவத்தையும் மட்டுமே சுட்டுதல் வேண்டுமன்றி, அவற்குப் பெருங்காலம் பிற்பட்டிருந்த புத்தர் சமணரின் தவவொழுக்கத்தையாதல் தவவடிவத்தையாதல் சுட்டுதல் ஒரு சிறிதும் இசையாதென் றுணர்ந்துகொள்க. தொல் காப்பியத்துள் யாண்டும் புத்தசமண் சமயங்கள் ஒரு தினைத்தனையுங் குறிப்பிடப் ப ரமையும் நினை பதிக்கற்பாற்று.

35

விற்

இன்னுங், கௌதமசாக்கியரும் மகாவீரருந் தோன்றி முறையே புத்தசமண் சமயங்களைத் தோற்றுவித்தற்கு முன், சாக்கிய வகுப்பினர் சிவபிரானையே வணங்கி வணங்கி வந்தன ரென்பது, வடநாட்டிலுள்ள பழைய கல்வெட்டுகளின் ஆராய்ச்சியால் நன்கு புலனாகாநிற்கின்றது. களதம் சாக்கியர் பிறந்த ஞான்று, அவர் சிவபிரான் திருவருளைப் பெறுதற் பொருட்டுச் சிவபிரான் திருக்கோயிற்குப் பெற்றோரால் எடுத்துச் செல்லப்பட்டமை, பழைய புத்தசமயக் கல்வெட்டு ஒன்றிற் செதுக்கி வைக்கப் பட்டிருக்கின்றது.36 மிகச் சிறந்த இச் சான்றுகளை உற்றாராய வல்லார் எவர்க்கும், புத்த சமண்மதங்கள் தோன்றுதற்குப் பல்லாயிர ஆண்டுகள் முற்றொட்டே இப் பரதநா டெங்கணும் பரவி யிருந்தது சைவசமயமேயா மென்பதூஉம், இங்கு முழுதும் உலவிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/122&oldid=1590744" இலிருந்து மீள்விக்கப்பட்டது