உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

147

(55, 56) புறநானூற்றின்கட் காணப்படுதலானும் மேலே 579 ஆம் பக்கத்திற் கி.பி.முதல் நூற்றாண்டின் முற்பகுதி யிலிருந்தவராகப் பெறப்பட்ட நக்கீரனாரது காலமே நல்லந்துவனார்க்கும் காலமாதல் தெளியப்படும். படவே, நல்லந்துவனார் கூறிய ‘பகல்வழியளவு’, கி.பி.இரண்டாம் நூற்றாண்டிலிருந்த கிரேக்க வானூலாசிரியரான ‘தாலமி’ என்பவர் கண்டெழுதிய ‘பகல்வழியளவுக்'கும் முற்பட்ட தாதலுந் தானே விளங்கும். இங்ஙனமாகக் கிரேக்க வானூலாசிரியர்க்கு முன்னமே தமிழ்ச்சான்றோர் ‘பகல் வழியளவு' தெரிந்திருந்தமை புலனாதலிற், கிரேக்கரிட மிருந்து அவ் வளவினைத் தமிழர் கற்றுணர்ந்தாரென்பது அடாது. மற்றுத், தமிழரிடமிருந்தே அதனைக் கிரேக்கர் கற்றுணர்ந்தாரென்க.

1

அற்றேற், கி.பி. ஆறாம் நூற்றாண்டிலிருந்த வராக மிகிரர் எழுதிய 'ஹோராசாஸ்திரத்’திற் காணப்படுங் கோள்கள், வான்வீடுகள் முதலியவற்றின் பெயர்கள் கிரேக்க மொழிச் சொற்களோடு ஒத்து நிற்றலும், அவை தமிழ்ச் சொற்களோடு ஒத்து நில்லாமையும் என்னையெனின்; கி.மு.முதல் நூற்றாண்டிலிருந்தே வடநாட்டவரும் அவர் வழியே வடமொழியுந் தமிழ்நாட்டின் கண்வந்து மிகுதியாய்ப் பரவத் துவங்கிவிட்டமையின் தமிழர்கள் முன்னே தனித் தமிழ்ச் சொற்களால் வழங்கிய தம் பொருள்களையும் இடையிடையே வடசொற்களால் வழங்கத் துவங்கி விட்டனர். மேலெடுத்துக் காட்டிய நல்லந்துவனாரது செய்யுட் பகுதியிற் றனித்தமிழ்ச் சொற்களினிடையே ‘புந்தி, 'மிதுனம்” அங்கி’, ‘பங்கு’, ‘யமன்’, 'பங்கு,‘யமன்’, ‘மகரம்’, முதலான வடசொற்கள் புகுந்துவிட்டமை காண்க. இங்ஙனமே நாட்செல்லச் செல்ல வடசொற்களும் வடமொழி வழக்குகளுந் தமிழ் நாட்டிற் பரவப் பரவத் தமிழர்களே தம் இயற்பெயர்களையும் 'ஞானசம்பந்தன்”, ‘சுந்தரன்”, ‘உமாபதி, சுவாமிநாத தேசிகன்', என்றற் றொடக்கத்து வட சொற்களால் அமைக்கலானதுடன், தாமே வருந்தி யாராய்ந்தறிந்தெழுதிய ஒப்புயர்வில்லாத் தனித்தமிழ் நூல்களுக்குஞ் 'சிவஞானபோதம், 'சிவஞானசித்தி’, 'சிவப்பிரகாசம்', 'சங்கற்பநிராகரணம்’, முதலான வடமொழிப் பெயர்களை யமைத்து, அந்நூல்களுள் எடுத்துரைக்கப்படுஞ் சில பல பொருள்கட்கும் வடசொற்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/156&oldid=1590780" இலிருந்து மீள்விக்கப்பட்டது