உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

பல

23

  • மறைமலையம் - 24

வான்நூலாராய்ச்சிக் குரிய சான்றுகள் இருத்தலையுங் குறித்துப் போந்தார். இவரைப்போலவே வீபர் என்னும் மேனாட் டாசிரியரும் பழைய ஆரியவேத நூல்களிலிருந்து சான்றுகள் எடுத்துக்காட்டி, மிகப்பழைய நாளிலேயே பரதநாட்டவர் “மதிவழியளவை” யாகிய வானூலா ராய்ச்சியிற் புலமையுடையராயிருந்தமை தெளித்து விளக்கினார்.24 இவர்களெல்லார்க்கும் முன்னரேயே கோல்புரூக் என்னும்

ஆசிரியர் இவ்வுண்மைகளை எடுத்துரைத்தனர்.

இப்

இனி, 'மதிவழியளவை’த் தவிரப் 'பகல்வழியளவு’ வடநாட்டிலிருந்த நம்பரத நன்மக்கட்குத் தெரியாதாயினுந், தென்னாட்டிலிருந்த பண்டைத் தமிழ் நன்மக்கட்கு

அவ்விருவகை யளவுந் தொன்றுதொட்டே தெரிந்திருந்தன வென்பதற்குப் பதினோராம் பரிபாடலிற் போந்த,

விரிகதிர் மதிய மொடு வியல்விசும்பு புணர்ப்ப எரிசடை யெழில்வேழந் தலையெனக் கீழிருந்து தெருவிடைப் படுத்த மூன்றொன்பதிற் றிருக்கையுள் உருகெழு வெள்ளிவந் தேற்றியல் சேர வருடையைப் படிமகன் வாய்ப்பப் பொருடெரி புந்தி மிதுனம் பொருந்தப் புலர்விடியல் அங்கி யுயர்நிற்ப அந்தணன் பங்குவின் இல்லத் துணைக்குப்பால் எய்த இறையமன் வில்லிற் கடைமகர மேவப்பாம் பொல்லை மதியம் மறைய வருநாளில் வாய்ந்த பொதியின் முனிவன் புரைவரைக் கீறி மிதுனம் அடைக விரிகதிர் வேனில் எதிர் வரவு மாரி

என்னும் பகுதியிற் பன்னிரண்டு நாள் வீடுகளும் (இராசிகளும்), தாங்கூறும் முதிர்வேனிற்காலத்தில் அவை காணப்பட்டவாறும் ஆசிரியர் நல்லந்துவனார் நன்கெடுத்து மொழிதலே சான்றாம். ஆசிரியர் நல்லந்துவனார், அகநானூறு, 59ஆஞ் செய்யுளில் மதுரை மருதனிளநாகனாராற் புகழ்ந்து பேசப்பட்டிருத்தலானும் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை இம் மருதனிள நாகனாரும்ஆசிரியர் நக்கீரனாரும் பாடிய பாட்டுக்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/155&oldid=1590779" இலிருந்து மீள்விக்கப்பட்டது