உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3 *

ஆராய்ச்சியைப் பழைய ய

145

வான்மீன் நிலைகளை யுணர்ந்து, அவற்றூடு செல்லும் மதியின் இயக்கத்தைக் கண்டறிந்து நாள்களுங் கோள்களும் வகுத்த நம் இந்திய மக்களின் ‘மதிவழியள’வாகிய சந்திரமான பாபிலோனியர் ஒரு சிறிதுந் தெரிந்தவர் அல்லர். இந்நாளில் ஆரியமொழி நூல்களை எழுத்தெண்ணிக் கற்று ஆரிய மொழியினும் மேனாட்டு மொழியாராய்ச்சியினும் மாப்பெரும் புலவராய்த் திகழ்ந்த மேனாட்டாசிரியரான மாக்ஸ்மூலர், இவ் வரிய பெரிய உண்மையினை இற்றைக்கு 44 ஆண்டுகட்கு முன்னமே பின்வருமாறு எடுத்துக் காட்டினார்:

"பாபிலோனியர் கண்டறிந்த வான் வீடுகள் பகலவன்

வழியவாகும். முளையெழுத்துப் பட்டையங்களை அடுத்தடுத்து ஆராய்ந்தமையாற் பற்பல உண்மைகள் புலனாயினவேனும், மதிவழியளந்த வான்வீட்டாராய்ச்சி பாபிலோனியர்பா லிருந்ததென்பதற்கு ஏதொரு சுவடுதானும் அகப்பட்டிலது. மதிவழியளவு பாபிலோனியர்க்குத் தெரிந்த தொன்றென்றே வைத்துக் கொள்வோமாயினும், வேத நூல்களையும் பழைய வேதச்சடங்குகளையும் அறிந்தவர் எவரும், அவ் எளிதான வான் அளவையினைப் பாபிலோனியரிடமிருந்து இந்துக்கள் இரவலாக வாங்கிக் கொண்டனரென நம்புதற்குத் தாம் எளிதில்இசையார். வேத வேள்விகளிற் பெரும்பாலன, பகலவ னியக்கத்தைவிட மதியினியக்கத்தையே சார்ந்து நிகழ்வன வென்பது எவரும் நன்குணர்ந்ததேயாம் ***** ஒவ்வொரு நாளுஞ் செய்யப்படுஞ் சடங்குகளாகிய மாப்பெரு வேள்விகள் ஐந்துங் காலை மாலையிற் செய்யப்படும் எரியோம்பலுமே யன்றி, வேதகாலத்தில் முதன்மை பெற்றன; ‘தர்சபூரணமாசம்’ என்னும் மறைநிலா முழுநிலா வேள்விகளும், பருவகால வேள்விகளாகிய 'சாதுர்மாசியமு'மே யாகும்.”22 இ ங்ஙனமாக இப் பரதநாட்டின்கணிருந்த பண்டை நன்மக்களே வான் நூலாராய்ச்சியிற் சிறந்து விளங்கினமை காட்டியதோடு, ‘மதிவழியளவு' இருக்குவேத இரண்டாம் மண்டிலத்தின் 32 ஆம் பதிகத்திலும், எட்டாம் மண்டிலத்தின் 3 ஆம் பதிகத்திலுங் குறிப்பிடப்பட்டிருத்தலையும் முதன்முத லெடுத்துக் ருக்குவேதத்தின் மட்டுமேயன்றி, எசுர் வேதத்திலுந், தைத்திரீயகத்தினுஞ், சாந்தோக்கியத்தினும்

காட்டினார்.

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/154&oldid=1590778" இலிருந்து மீள்விக்கப்பட்டது