உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

6

144

மறைமலையம் 24

அதுவேயுமன்றி, விவிலிய நூலிற் சொல்லப்பட்ட ‘சாலமன் என்னும் வேந்தன் மேல் நாட்டில் அரசுபுரிந்த கி.மு.1000த்தில், அஃதாவது இற்றைக்கு மூவாயிர ஆண்டுகளுக்கு முன்னமே மயிற்றோகை, யானைமருப்பு, குரங்கு, அகிற்கட்டை முதலான பண்டங்களை, அவ் வரசனுடைய மரக்கலங்கள் ‘உவரி” என்னும் இத் தென்னாட்டுத் துறைமுகத்தில் வந்து ஏற்றிக் கொண்டுபோன வரலாறுங், கருவாப் பட்டை, கருப்பூரம் முதலான பண்டங்கள் தமிழ்நாட்டிலிருந்து கிரேக்க நாட்டிற்கு இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகளின் முன்னரே ஏற்றிச் செல்லப்பட்டமையின் அப் பண்டங்களின் தமிழ்ப்பெயர்கள் கிரேக்க நூல்களிற் கலந்த வரலாறுங் 'கால்ட்வெல்' ஆசிரியரால் நெடுநாட்கு முன்னமே நன்கெடுத்துக் காட்டப்பட்டன. ஐயாயிர ஆண்டுகளுக்கு முற்றொட்ட காலத்திருந்தே தமிழர்களும் மேனாட்டவர்களும் ஒருங்கு கலந்து வந்தமை ஐயமின்றித் தெளியக்கிடத்தலின், அம் மேனாட்டு மொழிகளுட் கலந்த பலப்பல தமிழ்ச் சொற்களில் 'ஓரை' யென்பதும் ஒன்றாதல் காண்க.

ங்ஙனமாக

ப்

20

அற்றேலஃதாக, இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகளாக மேனாட்டவர்களே வான்நூ லாராய்ச்சியிற் சிறந்தவராகக் காணப்படுகின்றனரன்றி, இப் பரதநாட்டின் கண் உள்ளார், அவருள்ளும் இத் தென்றமிழ் நாட்டவர் அத்துணைப் பழைய காலத்தே அதில் வல்லுநரா யிருந்தன ரென்பது கண்டிலமாலெனின்; ஆராயாதுகூறினாய்; வானூலா ராய்ச்சி மதிவழியளவு (சந்திரமானம்) பகல்வழியளவு (சூரியமானம்) எனவும் இருதிறப்படும். மேனாட்டவரிற் பண்டைநாளிலே வானூலாராய்ச்சியிற் பெரும்புலமை பெற்று வயங்கினார் பாபிலோனியர் அல்லது சாலடியரெனப்படும் பழைய நாகரிக மக்களே யாவர். என்றாலும் இவர்கள் 'பகல்வழியளவு' என்னுஞ் ரியமான ஆராய்ச்சியிற் றேர்ந்தவர் களேயல்லாமல், மதிவழியளவு என்னுஞ் சந்திரமான ஆராய்ச்சியிற் றேர்ந்தவரல்லர், அதனை யுணர்ந்தவரும்அல்லர். வான் மீன்களைப் பன்னிரண்டு வீடுகளாக (இராசிகளாகப்) பகுத்து, அவற்றினூடு செல்லும் பகலவன் இயக்கத்தைக் கொண்டு 360 நாட்கள் அடங்கிய ஓர் ஆண்டினைப் பன்னிரண்டு திங்களாக வகுத்தனர்.21 ஆனாலும் இருபத்தேழு அல்லது இருபத்தெட்டு

""

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/153&oldid=1590777" இலிருந்து மீள்விக்கப்பட்டது