உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

143

அற்றேல், 'ஓரை' என்னுஞ் சொல் எந்தமொழிக்கு உரியதெனின்; மிகப்பழைய தமிழ்நூலாகிய தொல்காப் பியத்தில் அச்சொற் காணப்படுமாறுபோல் அங்ஙனமே பழைய கிரேக்கநூல் ஆரிய நூல்களில் அது காணப்படாமையானுந், தொல்காப்பியத்திற்கு மூவாயிரத்தைந்நூறாண்டு பிற்பட்டுக் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந் துண்டான கிரேக்க ஆரிய வான் நூல்களின் மட்டும் அது காணப்படுதலானும் அது பண்டைச் செந்தமிழ் மொழிக்கே யுரிய தூயதமிழ்ச் சொல்லாதல் உணர்ந்துகொள்க. அங்ஙனமாயின் அதற்குத் தமிழ்ச் சொற்பொருள் கூறுகவெனின் கூறுதும். 'ஓரை' என்னும் அச்சொற்கு முதனிலை ‘ஓர்’ என்பதாகும். “ஓர்ப்பு” என்பது ஒரு பொருளை ஆராய்ந்து உணர்தல்”7 என்று ஆசிரியர் நக்கீரனார் உரை கூறினாராகலின், அவ்வாறு ஆராய்ந்து உணரப்பட்ட வான்மீகி வட்டமே (இராசிச் சக்கரமே) ஓரையென வழங்கப்படலாயிற்று. பண்டைத் தமிழ்மக்கள் வழங்கிய ‘ஓரை’ என்னும் இத் தமிழ்ச்சொல்லே கிரேக்க மொழியிற் சென்று ‘ஹோரா’ என அம் மொழியினியல் புக்கு ஏற்பத் திரிந்து, பின் வடநாட்டில் வந்து குடியேறிய குடியேறிய கிரேக்கர் வாயிலாக வடமொழியிற் புகுவதாயிற்று.

அற்றேற், பண்டைத் தமிழ்மக்கள் தமக்கு நெடுந் தொலைவிலிருந்த மேனாட்டவராகிய கிரேக்கருடன் கடல் தாண்டிச்சென்று கலந்தாலன்றோ, அச்சொல்அவர் மொழியிற் கலத்தற்கு இடனுண்டாம்? எனின், அந்நிகழ்ச்சியும் ஒருசிறிதுகாட்டுதும்: மேல்கடற் பாலதான சாலடி நாட்டின் (Chaldea) தலைநகராகிய 'ஊர்' என்னும் இடத்தே நிலத்திற் புதைந்துகிடந்த பழைய வேந்தரின் அரண்மனை களைக் கிளறிப் பார்க்கையிற், கி.மு. 3000 த்தில் அஃதாவது இற்றைக்குச் சிறிதுகுறைய ஐயாயிர ஆண்டுகளின்முன் அங்குஅரசுபுரிந்த 'ஊரேயா” என்னும் வேந்தனாற் கட்டப்பட்ட அரண்மனையின் கண் தமிழ்நாட்டுத் தேக்கு மரத்துண் டொன்று கண்டெடுக்கப் பட்டது; அது கொண்டு, பண்டைத் தமிழர்கள் ஐயாயிர ஆண்டுகளுக்கு முன்னரேயே கடல் தாண்டிச் சென்று மேல்நாட்டவரொடு வாணிகம் நடாத்தினாரென ஆங்கில

வரலாற்று நூலாசிரியர் முடிவுகட்டிச் சொல்கின்றனர்.18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/152&oldid=1590776" இலிருந்து மீள்விக்கப்பட்டது