உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

  • மறைமலையம் - 24

வழங்கப்பட்டிருக்குமாயின், அதனை அப் பிறமொழிகளுக்கு உரிய சொல்லாகக் கொள்ளுதல் ஒக்கும். தொல்காப்பியம், கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேதான் இயற்றப்பட்டதாகும் என இச் சொல் வழக்கையே ஒரு சான்றாகக் கொண்டு நாட்டப்புக்கவர், அச்சொல் கிரேக்க மொழியிலேனும் வடமொழியிலேனுங் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்குமுன் இயற்றப்பட்ட நூல்களில் வழங்கப் பட்டுளதெனக் காட்டல் வேண்டுமன்றோ? அவ்வாறு செய்தலை விடுத்து, அதனை வாளா கிரேக்க மொழி யென்றால், அதனை ஆராய்ச்சியறிவுடையார் கைக்கொள் வரோ? யாம் ஆராய்ந்த மட்டிற் கி.மு. மூன்றாம் நூற்றாண் டிலாதல், அதற்கு முற்பட்ட காலத்திலாதல் இயற்றப்பட்ட கிரேக்க நூல் ஆரிய நூல்களில் ‘ஓரை' என்னுஞ்சொல் வழங்குதலைக் கண்டிலம். கி.பி. ஆறாம் நூற்றாண்டிலிருந்த வராகமிகிரரால் மட்டுங் கிரேக்கரின் வான் நூலாராய்ச்சியைத் தழுவி 'ஹோரா சாஸ்திரம்' என்னும் ஒரு நூல் வடமொழியில் எழுதப்பட்டிருக்கின்றது. அதுகொண்டு ‘ஹோரா' என்னுஞ்சொற் கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்குச் சிறிது முற்பட்ட காலத்திற் கிரேக்க மொழியில் வழங்கப்பட்டமை மட்டும் அறியப்படும். 16கி.மு.இரண்டாம் நூற்றாண்டிலிருந்த கிரேக்க ஆசிரியரான 'ஹிப்பார்க்கஸ்' காலத்திலேதான் கிரேக்கரின் வான் நூலாராய்ச்சி ஓர் ஒழுங்குபெறத் துவங்கி அவர்க்கு முந்நூறாண்டுகளுக்குப்பின் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இடையிலிருந்த 'தாலமி' என்னுங் கிரேக்க ஆசிரியாராலேதாம் அது முற்றுப் பெறலாயிற்று. ஆகவே, கி.மு. இரண்டாம் நூற்றாண்டிற்குங் கி.பி.இரண்டாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்திலேயேதான் 'ஹோரா' என்னுஞ் சொல் கிரேக்க மொழியில் வழங்கப் பட்டதாகல் வேண்டுமென்பது துணியப்படும். படவே, கி.மு. இரண்டாம் நூற்றாண்டிற்குமுன் கிரேக்க மொழியில் வழங்காத ஓரை என்னுஞ் சொல்லை அக்கிரேக்கமொழிக்கே உரியதென்றலுங், கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகிய 'தொல்காப்பியத்தை’ அந் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதாகிய அச் சொற்கொண்டு கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப் பட்டதாகு மென்றலும் முப்பாட்டன் திருமணக்காலத்தில் யான் அத்திருமணப் பந்தற்காலைப் பிடித்து நின்றேன்” எனக்கூறும் ஒருபேரனது சான்றுமொழியோ டொப்பவைத்து நகையாடற் பாலனவா

மென்க.

66

என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/151&oldid=1590775" இலிருந்து மீள்விக்கப்பட்டது