உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

3

141

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் கோளே குமரிநாட்டின் மாப்பெரும் பகுதியை வாய்ப்பெய்து கொண்டதாகு மென்பதூஉம், அக் கடல்கோளுக்கு முன்னர்ச் செய்யப் பட்டுத் தமிழ் வழங்கும் நிலனெங்கும் உலாயதே 'தொல்காப்பியம்' ஆமென்பதூஉம் இனிது தெளியக் கிடந்த வாறு காண்க. மற்றுக், கி.மு. 504 இலும், கி.மு. 306 லும் நிகழ்ந்த ஏனைக் கடல்கோள்கள் இரண்டுந், 'திருச்சீர் அலைவாய்’ (வடமொழியிற் 'கபாடபுரம்' எனப்பட்ட திருச்செந்தூர்க்குப் பக்கத்தே எஞ்சி நின்ற சில நாடு நகரங்களை இரண்டுமுறையாக அடித்துச்சென்ற சிறுசிறு கடல்கோள் களாகு மல்லாமற், குமரிநாட்டை முழுதுங் கவர்ந்த பெருங் கடல்கோள் ஆகாதென்பதுங் கருத்திற் பதிக்கற்பாற்று.

இனித், தொல்காப்பியத்துக் களவியல், 44 ஆஞ்சூத்திர மாகிய “மறைந்த வொழுக்கத்து ஓரையும் நாளும்" என்பதன்கட் காணப்படும் 'ஓரை' என்னுஞ் சொல்லைக் கிரேக்க மொழி யெனக் கொண்டு, அவ்வாற்றால் தொல்காப்பிய காலத்தைக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் பாற் படுப்பிக்க வேண்டினார் கூற்றைச் சிறிது ஆராய்வாம். 'ஓரை' என்னுஞ்சொல் இன்னமொழிக்கு உரியதென்று ஆராய்ந்து உறுதிப் படுத்தியபின், அதனை ஒரு சான்றாகக் கொண்டு ஒரு முடிவுக்கு வருதலன்றோ உண்மையாராய்ச்சி செய்வாரது கடமையாகும்? அங்ஙனம் ஆராய்ந்து பாராது 'ஓரை' எனும் அச் சொல்லைக் கண்ட அத்துணையானே, அதனைக் கிரேக்க மொழியெனத் துணிந்துரைத்தல் பெரிதும் பிழைபடுவ துடைத்தாம். இங்ஙனமே இஞ்ஞான்று ஆராயாமல் வடமொழிகளெனவும் பிறமொழிகளெனவும் கொள்ளப்படும் நூற்றுக் கணக்கான சொற்கள் ஆராய்ந்து பார்க்கப் பார்க்கத் தனிச்செந்தமிழ் மொழிகளாதலை அறிவுடையோர் (Dr. Caldwell) காட்டா நிற்பர். யாமும் மேலே சில காட்டிப் போந்தாம். இனி, 'ஓரை என்னுஞ் சொல் தமிழ்மொழியிலுங் கிரேக்க மொழியிலும் வடமொழியிலுங் காணப்படுகின்றது. மூன்று மொழிகளிலும் பொதுவாகக் காணப்படும் இச் சொல்லைக் கிரேக்க மொழிக்கே யுரியதென வரைந்து கட்டினவர், அவ்வாறு தாம் அதனை வரைந்து கட்டுதற்குக் காட்டிய சான்றென்னை? ஏதுமே காணேம். தொல்காப் பியத்திற்கு முற்பட்ட கிரேக்க நூலிலாயினும் வடநூலிலா யினும் 'ஓரை' என்னும் அச் சொல்

П

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/150&oldid=1590774" இலிருந்து மீள்விக்கப்பட்டது