உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

140

மறைமலையம் - 24

இம்

மென்பதூஉம் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெள்ளிதின் விளங்கற் பாலனவாமென்க. தமிழ்நூல் வடநூற் சான்று களானும், இஞ்ஞான்றை ஆங்கில மாப்பேராசிரியர் செய்து போதகரும் வியத்தகு ஆராய்ச்சிகளானும் ஐயுறவுக்குத் தினைத்தனை இடமுமின்றி நாட்டப்பட்டதாகிய மெய்ந்நிகழ்ச்சி யினை அடியோடு புரட்டி அப் புரட்டால் தமிழின் தொன்மையைக் குறைத்துவிடுவதற்கு ஆவலுற்றது உழலும் அப் பார்ப்பனரது செயல், மலையைக் கல்லியெறிதற்கு மிக முயன்று அது கைகூடாமையின் மாயையின் றோற்றமாம் அம்மலை என்றுமில்லாத வெறும் பொய்ப்பொருளே யாமெனக் கரைந்து மகிழும் அவர் தம் இனத்தாரது உரை போற் கரைந்துமகிழுநர் செயலாய் நகையாடி விடுக்கற்பால தாகும். மேலாராய்ந்து காட்டியவாற்றால், மக்கட்டோற்றத் திற்கு முன் தெற்கின் கணிருந்த பெருநில வெல்லைகளைப் பற்பல காலங்களிற் கவர்ந்து வந்த கடல்கோள்கள் பற்பல உளவாயினும் அவையெல்லாம் ஈண்டை யாராய்ச்சிக்கு வேண்டப்படா வெனவும், மக்கட்டோற்றத்திற்குப் பல்லாயிர ஆண்டுகள் கழித்துத் தோன்றிப் பண்டைத் தமிழகமாகிய குமரிநாட்டின் பெரும் பரப்பை வாய்ப்பெய்து கொண்ட பெருங் கடல்கோள் புறத்தேயுள்ள தமிழர்தம் நாடு நகரங்களை அழித்தொழிப் பினும், அவர் தமதகத்தே ஆராய்ந்து எழுப்பிய மாப்பேரறிவுநிலையாகிய தொல்காப்பியத்தை யழிக்கும் வலியிலதாய், அதன் றொன்மை மாட்சியினை யஞ்சி, அதுவீறி நிற்கும்இத் தென்றமிழ் நாட்டின் கீழ்கரை மேற்கரைப் பக்கங்களைத் தன் திரைக்கைகளாற் கவைஇத், தான் முன் செய்பிழையினைக் கூறி ஓவென ஓலமிட்டு, அதன் அடிக்கீழ் வீழ்ந்து அரற்றாநிற்கின்ற தெனவும் ஓர்ந்து கொள்க.

இனிச்,‘செங்கோன் றரைச்செலவு' என்னும் நூலுரையினும், அடியார்க்குநல்லா ருரையினுங் குமரி நாட்டிலிருந்தனவாகக் குறிப்பிடப்பட்ட 'ஏழ் தெங்கநாடு' 'ஏழ்பனைநாடு" என்பவை களில் அழிந்தனபோக இப்போது எஞ்சி நிற்பனவே: ஈழம், நக்கவாரம், மோரிசு, சுமத்திரா, யாவா முதலான தீவுகளாகும்.இத் தீவுகளிலெல்லாந் தென்னையும் பனையுமே மிகச் செழித்திருத்தலும் மேலை நிகழ்ச்சிக்குப் பின்னும் ஒரு பெருஞ்சான்றாம். ஆகவே, கி.மு. 2387 இல் நிகழ்ந்த முதற்கடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/149&oldid=1590773" இலிருந்து மீள்விக்கப்பட்டது