உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 3×

139

பொய்யுரை யன்ற பார்ப்பனருரையே புரைபட்டுப் பொய்படுவதா மென்க.

அற்றேல், ஆங்கில ஆசிரியர் பலர், தெற்கின் கண்ணதான பெருநிலப்பரப்பு மக்கள் தோன்றுதற்குப் பன்னூறாயிர ஆண்டுகளுக்கு முன்னரே கடல்நீரால் விழுங்கப்பபட்டதெனக் கூறுவதென்னையெனின்; குமரி நாட்டினும் நான்மடங்கு பெரிதாய், அக் குமரிநாட்டின் தெற்கிலிருந்த பெருநிலம் மட்டுமே மக்கள் தோன்றுவதற்குப் பன்னூறாயிர ஆண்டுகட்கு முன்னர்க் கடலுள் அமிழ்ந்துபோயிற் றென்பதே அவர்தங் கருத்தாவதாம். மக்கள் தோன்றுதற்கு முன் அழிந்துபட்ட அந்நிலப் பரப்பைப் பற்றி ஈண்டு ஆராய்ச்சியில்லை. மக்கள் தோன்றியபிற் பல்லாயிர ஆண்டுகள் கழித்துக் கடல்வாய்ப் புக்க குமரிநாட்டைப் பற்றியதே யாம் ஈண்டு எடுத்துக்கொண்ட ஆராய்ச்சியின் பெற்றியாம் என்க. அற்றன்று, மக்கள் தோன்றுதற்கு முன்தெற்கின்கண் இருந்த பெருநிலத்தைக் கவர்ந்த கடல் கோள் ஒன்றுமே பெரியதொரு கடல்கோளாம்; மற்று, அவர் தோன்றியபின் நிகழ்ந்தனவெல்லாம் அத்துணைப் பெரிய கடல்கோள்கள் ஆகா; அவையெல்லாஞ் சிறுசிறு நிலப்பகுதிகளை அடித்துச் சென்ற சிறுசிறு கடற் பெருக்குகளேயா மெனின்; மக்கட் டோற்றத்திற்குப்பிற் பெருங்கடல்கோள்கள் ஏதும் நிகழ்ந்தில தென்று அவர் அங்ஙனந் துணிந்து சொல்லுதற்குச் சான்றென்னை? உலக இயற்கையிற் பண்டுதொட்டு தாட்டு நிகழ்ந்து வராநின்ற சாலப் பரிய மாறுதல்களெல்லாம் இப் பார்ப்பனர் தங் கருத்துப் படிதான் நிகழ்ந்து வருகின்றன போலும்! லப்பக் என்னும் ஆங்கில ஆசிரியர் மக்கட்டோற்றத்திற்குப் பின் இந்திய மாக்கடலால் விழுங்கப்பட்ட நிலப்பரப்பு மிகப் பெரிதாதல் வேண்டுமென நன்காய்ந்து முடிவுகட்டிய உரைக்கூற்றை மேலே எடுத்துக்காட்டின மாகலானும், அவர் கூறிய அம்முடிபு குமரிநாடிருந்த காலத்தில் இயற்றப்பட்ட செங்கோன்றரைச் செலவு என்னும் நூற்கூற்றொடுங், குமரிநாடு கடல் கொண்டபின் இயற்றப்பட்ட தமிழ்நூற் கூற்றுக்களொடும் முழுதொத்து நிற்கக் காண்டலானும் அஞ்ஞான்றிருந்த தமிழகமாகிய அக்குமரிநாடு பெரிய தொரு நிலப்பரப்பேயா மென்பதூஉம், அதனை விழுங்கிய கடல்கோளும் பெரியதொரு கடல்கோளேயா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/148&oldid=1590771" இலிருந்து மீள்விக்கப்பட்டது