உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

க்

மறைமலையம் - 24

66

சிறிதுங் குறிக்கப்பட்டில. இனி, மற்றோர் அறிஞர் பழைய தமிழ்ப்பாட்டுகள் சிலவற்றின். சான்று கொண்டு “ அணு 8 -க் கொண்டது 1-தேர்த்துகள், தேர்த்துகள் 8-க் கொண்டது 1- பஞ்சிழை, பஞ்சிழை 8 -க் கொண்டது1 மயிர் 8-க் கொண்டது 1-மணல் மணல் 8-க்கொண்டது 1-கடுகு, கடுகு 8 -க் கொண்டது 1 - நெல், நெல் 8 - க் கொண்டது 1 - விரல், விரல் 12 கொண்டது 1 - சாண், சாண் 2 - கொண்டது 1 - முழம், முழம் 4 -கொண்டது 1-கோல், கோல் 500 -கொண்டது 1-கூப்பீடு, கூப்பீடு, 4 - கொண்டது1-காதம்" என நன்கு விளக்கிக் காட்டியிருத்தலோடு, இந் நீட்டலளவைக் கணக்கு முற்றுந் தனித்தமிழ் நாட்டு வழக்கேயா மெனவும் நாட்டி யிருக்கின்றார்.5 இவ்அறிஞர் தாம் சான்றாகக் காட்டிய பாட்டுகள்இன்ன நூலின்கண் உள்ளனவென்பது காட்டிற்றிலராயினும், இவர் காட்டிய இந் நீட்டலளவைக் கணக்குத் தனித்தமிழ் நாட்டுவழக்கேயா மென்பதற்கு, இதன்கணுள்ள சொற்கள் அத்துணையுந் தனித்தமிழ்ச் சொற்களாயே யிருத்தலுங், 'காதம்' என்னுஞ் சொற்பழைய வடநூல்களுட் காணப்படாமையுமே சான்றாமென்பது. எனவே, ஒரு காவதம் என்பது 8000 முழங்கொண்ட ஒரு நெடுவழியே யாதல் தெளியப்படும். அஃது இஞ்ஞான்றை ஆங்கில அளவைப்படி இரண்டே கால் மைலும் எண்பது முழங்களும் ஆகின்றது. ஆக, எழுநூறு காவத நிகளமென்பது சிறிதேறக்குறைய ஆயிரத்தறுநூறு மைல்களே யாகின்றது. ஆப்பிரிக்கா தேயத்தின் கீழ்க்கரையிலிருந்து கிழக்கே சுமத்திரா தீவகத்தின் மேல்கரைவரையிற் கடல் கொண்ட நிலத்தின் நிகளஞ் சிறிதேறக்குறைய நாலாயிர மைலாகும். ஆப்பிரிக்காவின் வடக்கிலுள்ள சகாரா

பாலைநிலத்தின் நிகளம் மூவாயிர மைல் என்பது முன்னரே காட்டினேம். அதன் அகலம் ஆயிரம் மைல் உளது. பெரும்பரப்பில் நின்ற கடல்நீர் வற்றி, ஆயிரத்தறுநூறு மைல் அஃதாவது எழுநூறு காவத நிகளமுள்ள குமரிநாட்டை விழுங்கிற் றென்பதில், உண்மை நிகழ்ச்சிக்கு மாறானது ஏதுமேயில்லை. ஆதலால், இவ்வுண்மை நிகழ்ச்சியைத் தமது காலத்து வழங்கிய நூற்சான்றுகள் கொண்டு நன்குவிரித்து விளக்கிய அடியார்க்கு நல்லாருரையைப் புனைந்து கட்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/147&oldid=1590770" இலிருந்து மீள்விக்கப்பட்டது