உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

137

புகுந்த அப் பார்ப்பனர், குமரிமுனைக்குந் தென்றுருவத்திற்கும் இடையே யுள்ள அகலம் ஏழாயிர மைலிற் குறைந்துளதாகலின், எழுநூறு காவதம் அல்லது ஏழாயிர மைல் கடல்கொண்ட தென்ற அடியார்க்கு நல்லாருரை பொருந்தாதென்றார். அகலத்தில் ஏழாயிர மைல் என்பது அடியார்க்கு நல்லாருரையிற் பெறப் படாமையின், அவ்வாறு பொருள் செய்த அப் பார்ப்ப னருரையே பொருந்தா வழுவுரையா மென்க. அடியார்க்கு நல்லார் உரைத்த அப்பரப்பின் அளவு ஏன் நிகளத்தையே சுட்டுவதா யிருத்தலாகாது? என்று

வினாவுவார்க்கு அவர் விடைகூறுமாறு யாங்ஙனம்? குமரி என்னும் யாற்றுக்கும் பஃறுளி யென்னும் யாற்றுக்கும் இடையேயுள்ள நிலம் 700 காவதமுளதென்ற வளவானே” அஃதகலத்தின் அளவையே சுட்டுவதென்றால் பொருந்துமோ? அவ்விரண்டு யாறுகளைச் சுட்டிக் கூறினமையானே அவற்றினிடைப் பட்ட நிலத்தின் அகலம் சிறிதென்பது தானே பெறப்படா நிற்க, நிகளத்தில் நிற்க, நிகளத்தில் அங்ஙனம் இருபுறத்து எல்லைகளுஞ் சுட்டப் படாமையின் அந் நிகளத்தின் பெரும்பரப்பு எல்லாரானும் அறியப் படாமைபற்றி அதுவே அங்ஙனம் 700 காவதமென்று அவராற் குறிக்கப்பட்டதென்பது தானே போதரும்.

இனி, உரைகாரர் அடியார்க்கு நல்லார் காலத்திலும் அவர்க்கு முற்சென்ற காலத்தினுங் 'காவதம்' என்னுஞ் சொல் எத்தனை நாழிகை வழிக்குப் பெயராய் வழங்கிற்றென் பதனைத் தெளிய அறிதற்குத் தக்க சான்றுகள் பழைய தமிழ்நூல்களில் ஆராய்ந்த மட்டில் அகப்பட்டில. ஆயினும், இற்றைக்கு 2200 ஆண்டுகட்குமுன் இயற்றப் பட்டதாகிய கௌடிலியரது அர்த்த சாஸ்திரத்தில் 14000 முழங்கொண்டதே ஒரு யோஜனையென்று சொல்லப் பட்டிருத்தலால், அதுவே ஒரு சின்னக் காவதமாம் என்றுங் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகிய 'கணிதசார சங்கிரகத்’தில் 32000 முழங்கொண்டதே ஒரு போஜனை யென்று கூறப்பட்டிருத்தலால் அதுவே ஒரு பெரிய காவதமாம் என்றும் ஓர் அறிஞர் எழுதினார்." மேற்காட்டிய வடநூல்கள் இரண்டிலும் 'யோஜனை' யினளவு இத்துணை யென வரையறுத்துரைக்கப்பட்டிருக் கின்றதே யல்லாமல், ‘காவதம்’ என்னுஞ் சொல்லாதல் அதனளவாதல் அவற்றின்கட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/146&oldid=1590769" இலிருந்து மீள்விக்கப்பட்டது