உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

மறைமலையம் - 24

வேண்டும்.அப்போது

காணப்படாவிடினும், மடகாஸ்கர் அந்தமான் தீவுகள், மலாய் நாடு, பிலிப்பைன், புதுக்கினியா, புதுஹீபிரிட்ஸ், புதுக்காலிடோனியா, பிஜித் தீவுகளிலுந், தாஸ்மானி யாவிலுங் காணப்படுகின்றனர். இவர்கள் கப்பலேறிச் செல்லும் வழக்கமுடைய ய ரல்லராகையால், இவர்கள் மேற்கூறிய நாடுகளிலும் தீவுகளிலும் பரந்து காணப்படுதற்கு, ஆப்பிரிக்காவின் கீழ்கரையிலிருந்து இந்தியமாக் கடலினூடே நெடுகத் தொடர்ந்து நீண்டு கிடந்த தீவுகளாவது அல்லது மிகப்பெரிய நிலமாவது இருந்ததாகல் வேண்டும். அப்போது இந்தியக் கடல் இப்போதுள்ள சகாரா பாலைநிலத்தில் நின்றுலவினதாயிருத்தல் வேண்டும்”13 என்று அவ் வியற்கை நூற்பேரறிஞர் பெரிதாராய்ந் துரைக்கும் மெய்யுரையால், இப்போதுள்ள இந்திய மாக்கடலின் ஒரு பெரும்பகுதி பல்லாயிர ஆண்டுகளுக்கு முன் ஒரு பெருநிலமாயிருந்த தென்பதூஉம், அந் நிலத்தின் கண் உறைந்த மக்களின் கால் வழியில் வந்தோரே இப்போது ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியமாக்கடலின் நெடுக ஆங்காங்குள்ள தீவுகளிற் சிதர்ந்து காணப்படும் நிகிரோவ ராவரென்பதூஉம்

இனிது

பெறப்படுகின்றன வல்லவோ? இனி, இப் பெருநிலப்பரப்பு முழுதும் ஒரே காலத்திற் கடல்நீரால் விழுங்கப்பட்டதெனக் கோடல் பெரியதொரு பிழைபாடாம். சகாரா என்னும் பாலை நிலத்தின்கண் நின்ற கடலே, நிலவுருண்டையின் மையத்தே காலங்கடோறுந் தோன்றும் அதிர்ச்சிகளின் அளவுக்குத் தக்கபடி அவ்விடத்தை விட்டுப் பெயர்ந்து குமரிநாட்டை மெல்ல மெல்ல விழுங்கியதாகும். சகாரா நிலத்தின் சுற்றளவு காற்கோடி மைல் ஆகும்; இந்திய மாக்கடலின் சுற்றளவோ இரண்டரைக்கோடி மைல் ஆகும். ஆகவே, சகாராவில் நின்ற

கடல்

ல் நீரால் விழுங்கப்பட்ட குமரிநாட்டின் சுற்றளவு சிறிதேறக் குறைய இருபத்தைந்து இலட்சம் மைல் மைல் உள்ளதாகும். சகாராவின் நிகளம் மூவாயிரம் மைல் என்று கணக்கிடப் பட்டிருத்தலாற், குமரிநாட்டின் நிகளமும் மூவாயிரம் மைலாகுமென்றும், அதன்அகலம் எண்ணூாறு மைலுக்குக் குறையாதென்றுங் கணக்குச் சய்தல் இழுக்காது. கடல்கொண்ட நாற்பத் தொன்பது நாடுகளும் 700 காவதம் பரப்புள்ளன என்று அடியார்க்குநல்லார் கூறியதை ஆராயப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/145&oldid=1590768" இலிருந்து மீள்விக்கப்பட்டது