உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

3

135

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் நன்காய்ந்த பெரியாராகலின், அவர் இவ் வரலாற்றைப் பழையநூற் சான்றின்றி விரித்துரையார்; இவருரையிற் கண்ட ‘ஏழ்தெங்கநாடு' செங்கோன்றரைச் செலவு என்னும் முதலூழி நூலின் உரையிற் காணப் படுதலோடு, 'எழுநூற்றுக்காவதவாறு” என்பதனாற் பெறப்பட்ட பெருநிலப்பரப்பும் அப் பழையவுரையிற் குறிக்கப்பட்டமை காண்க. 'பெருந்தமிழ் நிலமாகிய குமரிநாடு கடல்வாய்ப் புக்க செய்தி தொன்றுதொட்டு நூலாசிரியர் உரையாசிரியர் களால் வரலாற்றுமுறை வழாமல் உரைக்கப்பட்டு வரா நிற்கவும், அடியார்க்கு நல்லார் காட்டியவாறு அத்துணைப் பெருநிலங் கடல்நீரால் விழுங்கப்பட்டது மக்கள் தோன்றுதற்கு எத்தனையோ நூறாயிர ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததால் வேண்டுமே யன்றி ஐயாயிர ஆண்டுகட்குமுன் நிகழ்ந்தது ஆகாதெனவும் அவருரைத்தவுரை அவரே கட்டிய பொய்யுரையா மெனவும், கடல் கொண்ட அத்தமிழ்நிலம் ஒரு சிற்றளவினதேயா மெனவும், வேறொரு பார்ப்பனப் புலவர் செந்தமிழ் 14ஆந் தொகுதியின் 11,12ஆம் பகுதிகளில் எழுதினார்.

ல்

இப்போது குமரி முனைக்குத் தெற்கேயுலவும் 'இந்திய மாக்கடல்' பல்லாயிர ஆண்டுகளுக்குமுன் பெருநிலனா யிருந்ததென்பது இஞ்ஞான்றை 'நிலநூல்’ வல்லார் எல்லார்க்கும் ஒப்ப முடிந்த தொன்றேயாம். இப் பார்ப்பனர் தாமும் அதனை உடம்படுகின்றார். அப் பெருநிலப் பரப்பைக் கடல்நீர் விழுங்கியதும் இப் பார்ப்பனர்க்கும் ஏனை இயற்கை நூல் வல்லார்க்கும் உடம்பாடாவதேயாம்.2 பண்டைக்கால மக்கட் பகுதியாரின் வரலாறுகளை ஆராய்ந்து நூலெழுதி னாரில் மிகச் சிறந்தாரான ஜான்லப்பக் என்னும் ஆசிரியர், நிகிரோவர் என்னும் மக்களின் பண்டை வரலாற்றினை நன்காய்ந்து பார்த்துப் பின்வருமாறு முடிவு கூறுகின்றார்.

"நிகிரோவர்” ஆப்பிரிக்கா தேயத்திற் ‘சகாரா’ என்னும் பாலைநிலத்திற்குத் தெற்கேயுள்ள நாடெங்கும் உறைகின்றனர்; அப்பாலை வெளியை அவர்களாவது மற்றை விலங்கினங் களாவது கடந்து சென்றதேயில்லை; இம் மக்கள் அரேபியா, பாரசிகம், இந்துஸ்தானம், சீயம், சீனம் முதலிய நாடுகளிலும் யாவா, சுமத்திரா, போர்னியோ முதலிய தீவுகளிலுங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/144&oldid=1590767" இலிருந்து மீள்விக்கப்பட்டது