உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

மறைமலையம் 24

இயற்றப்பட்ட தொன்றென்பது பெறப்படும். குமரிநாடு இருந்த முதலூழிக்கட் செய்யப்பட்ட செங்கோன்றரைச் செலவு என்னும் நூலின் மிகப் பழைய வுரையில் “பஃறுளியாற்றுத் தலைப்பாய்ச்சல் ஏழ்தெங்க நாட்டு மூத்தூர் அகத்தியன்” எனவும், “முதலூழி, முன்கடல் கொள்ளப்பட்ட பெரும்பரப்புத் தமிழ் நிலம்’ எனவும் போந்த உரைக் குறிப்புகளாற், பஃறுளியாறு பாய்ந்த குமரிநாடு மிகப் பெரியதொரு நிலனாயிருந்ததென்பது புலனாம். இவ்வுண்மை,

பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள

என்று சிலப்பதிகாரத்துந் தெளித்துக் கூறப்படுதல் காண்க. வடிகளுக்கு உரையெழுதிய‘அடியார்க்கு நல்லாரும்,

அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வல்லையாகிய பஃறுளி யென்னும் ஆற்றிற்கும், குமரியென்னும் ஆற்றுக்கும் எழு நூற்றுக்காவதவாறும் இவற்றின் நீர்மலி வானென மலிந்த ஏழ்தெங்கநாடும் ஏழ்மதுரைநாடும் ஏழ்முன் பாலைநாடும் ஏழ்பின் பாலைநாடும் ஏழ்குன்றநாடும் ஏழ்குணகாரைநாடும் ஏழ்குறும்பனைநாடு மென்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும் காடும் பதியும் தடநீர்க் குமரி வடபெருங் கோட்டின்காறும் கடல்கொண் டொழிதலாற் குமரியாகிய பௌவமென்றார்”

என்று கடல்கொண் டொழிந்த பெருநிலப் பரப்பாகிய குமரிநாட்டின் வகைகளெல்லாம் விரித்துரைத்தார்.இஞ்ஞான்று கிடைக்கப்பெறாத அரிய பெரிய தமிழ் நூல்கள் பற்பலவற்றை நன்காராய்ந்துணர்ந்த இவ் வுரைகாரர் உரைத்த குமரிநாட்டின் பெரும்பரப்பு, மேலே காட்டிய செங்கோன்றரைச் செலவின் உரையாசிரியர் கூற்றோடு பெரிதொத்து நிற்றல் காண்க. ங்ஙனமே ‘களவியல்' முகவுரை யுரைகாரரும், இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும், 'கலித்தொகை'யில் க0சஆம் கலியின் ஆசிரியரும் பெரும்பாலும் ஒத்துரைப்பர். இவருட் சிலர் கூறுவன சுருக்கமாயும், வேறு சிலர் கூறுவன விரிவாயும் இருக்கும்; அடியார்க்கு நல்லார் பண்டை நூல்கள் பலவற்றை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/143&oldid=1590766" இலிருந்து மீள்விக்கப்பட்டது