உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 3

133

சிறப்புவகையாற் பொருள் செய்வது யாங்ஙனம் பொருந்தும்? இளங்கோவடிகள் வேறியாண் டேனும் இந்திரன் ஆக்கியது ஐந்திரமே எனக் கூறினரா? ல்லையே. அவ்வாறிருக்க, அவ்வடிகளிற் சுட்டியது ஐந்திரவியாகரணமே என்ற உரைகாரருரை பொருத்த முடையதாகக் காணப்பட வில்லை. மற்றுக், கௌந்தியடிகள் மொழிந்த விடையை உற்று நோக்குங்காற், சமண் சமயக் கோட்பாடுகள் பொதிந்த ஒரு நூல் இந்திரன் எனப் பெயரிய ஓர் அரசனால் இயற்றப்பட்டு முன்னரே யுளதாயிற் றென்பதே அதனாற் போதரும். அருகதேவன் அருளிச் செய்த ஆகமம் என்பது வீட்டுநூற் பொருளை யறிவுறுத்துவ தாயிருத்தல் வேண்டுமேயன்றி, இலக்கணமாகிய கருவி நூற்பொருளை யறிவுறுத்துவதாய் ருத்தலாகாது. ஆகவே அவ்வாகமப்பொருளோடு ஒப்பச் செய்த நூலும் வீட்டு நூற்பொருளையே யுணர்த்துவதா யிருத்தல் வேண்டுமென்று தெளிந்து கொள்க. ஆகவே, மேலே காட்டிய சிலப்பதிகார அடிகளிற் சமண் முனிவர் செய்த வடமொழியிலக்கண நூலாகிய ஜைநேந்திரஞ் சுட்டப் பட்டதெனக் கரைந்த பார்பனருரையும் அவரோ டொப்பக் கூறும் ஏனையோருரைகளும் பொள்ளற்பட்டுப் போலியா யொழிந்தமை காண்க. அவை அவ்வா றொழியவே, ஐந்திரம் நிறைந்த ஆசிரியன் தொல்காப்பியனைச் சமண் மதத்திலும், அம் மதத்தவர் இருந்த கி.பி.ஆறாம் நூற்றாண்டிலும் படுப்பிக்க முயன்றார் முயற்சியும் புரைபட்டொழிந்தமை காண்க.

இனி, இலங்கைத் தீவின் வரலாற்றிற் சொல்லப்பட்ட மூன்று கடல்கோள்களிற் கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் நிகழ்ந்த மூன்றாம் கடல்கோளுக்குச் சிறிது முன்னரேதான் 'தொல்காப்பியம்' இயற்றப்பட்டதாகல் வேண்டுமென்ற மற்றொரு பார்ப்பனருரையின் பெற்றியினை ஆராய்வாம். மூன்றில் முதற் கடல்கோள்கள் கி.மு. 23, 87 இல் நிகழ்ந்ததென லங்கை வரலாறு' கூறாநிற்ப, அதற்குமுன் 'தொல்காப்பியம்’ இயற்றப்பட்டதாகுமென

உரையாமல்,

மூன்றாங் கடல்கோளுக்கு முன்னர்த்தான் அஃதியற்றப் பட்டதெனக் கூறுதற்கு அவர் காட்டிய ஏது வென்னை? ஒன்றுமேயில்லை. மேலே யாம் பலவாற்றானும் விளக்கிக் காட்டிய பகுதிகளால், தொல்காப்பியங் 'குமரிநாடு' கடல் கடல் கொள்ளப்படுமு ன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/142&oldid=1590765" இலிருந்து மீள்விக்கப்பட்டது