உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

மறைமலையம் 24

'ஜைநேத்திரத்’தின் ஆசிரியரா வரெனப் பேல்வால்கரும் முடித்துக் கூறினார்' இனி, 'ஜைநேந்திரம்' இயற்றப்பட்ட காலங் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியாமென்பதும் அவரால் நன்கு காட்டப்பட்டது." கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையை ஆண்ட 'முதற்கயவாகு' மன்னன், சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளின் காலத்தில் ஆ இருந்தவன் என்பது சிலப்பதிகார நூலினுள்ளேயுங்" குறிக்கப்பட்டிருத்தலால், ஜைநேந்திரம் இயற்றப்படுதற்கு 250 ஆ ண்டுகட்கு முன்னரேயுள்ள சிலப்பதிகாரத்திற், பிற்பட்ட அச்சைநேந்திர நூல் குறிப்பிடப்பட்டதென்றல் யாங்ஙனம் பொருந்தும்? 'மொட்டைத் தலைக்கும் முழந் தாளுக்கும் முடிப்போடுதலோடு" ஒப்ப. இயைபு சிறிது மில்லாதவைகளை இயைத்து வைப்பதில்இப் பார்ப்பனரன்றி மற்று எவர் வல்லார்! அது நிற்க.

அமற்காட்டிய சிலப்பதிகார அடிகளிற் குறிக்கப் பட்டது. 'ஜைநேந்திரம்' என்னும் வடமொழியிலக்கணம் ஆதல் செல்லாதென்றது ஒக்கும்; ‘பழைய பிராதி சாக்கியங்’களையும் ஐந்திரத்’தையும் பின்பற்றிச் செய்த 'காதந்தரம்' என்னும் வியாகரணநூல், தக்கணத்திற் கி.பி. முதல் நூற்றாண்டில் அரசுபுரிந்த ‘சாதவாகனன்' காலத்த தாகலின், அதுவே அச் சிலப்பதிகார அடிகளிற் சுட்டப் பட் பட்ட தாகுமென்று கொள்ளாமோவெனிற்; கொள்ளாமன்றே; என்னை? அங்கே சுட்டப்பட்டது விண்ணவர் கோமான் இந்திரன் இயற்றிய நூலேயல்லாமற் பிறிதன்று; வெளிப் படையாகச் சுட்டப்பட்ட தொரு நூலை விடுத்துச் சுட்டப்படாத தொன்றனை ஆண்டுக் கொணர்ந்து பிணைத்தல் பெரிதுங் குற்றமாகலினென்க.

அற்றாயினும், இந்திரன் ஆக்கிய நூற்பொருளை அருகதேவன் அருளிய ஆகம நூல்களிற் பரக்கக் காணலாம் என்று கௌந்தியடிகள் கூறும் பின்னிரண்டடிகளைக் கொண்டு, ஐந்திர நூற் பொருளை அகத்தடக்கிய சமண் நூல்கள் சிலப்பதிகாரத்திற்கு முன்னரே உளவாதல் பெறப்படுமாலோ வெனிற் கூறுதும்: மேலே குறித்த சிலப்பதிகார அடிகளில்

இந்திரன் ஆக்கிய நூல் என்று பொதுவகையாற் குறிக்கப்பட்டிருப்பதற்கு 'ஐந்திரவியா கரணம்’ எனச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/141&oldid=1590764" இலிருந்து மீள்விக்கப்பட்டது