உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3

131

பொய்கைகள் உள. அவற்றுட் “புண்ணிய சரவணம்” என்னும் பொய்கையில் நீராடுவிராயின் வானவர்க்கு அரசனான இந்திரன் இயற்றிய ப சிறந்த நூலினுட் பொருளை உணரப்பெறுவீர்" என்று கூறக், கோவலனுடன் இருந்த கௌந்தியடிகள் அச் சொற்கேட்டு "ஆயுட் கற்பத்தினை

யுடை

ய அவ்விந்திரன் இயற்றிய நூலின் மெய்ப்பொருளை அருகன் அருளிச்செய்த பாட்டியலில் விளங்க அறிவாயாக என அறிவுறுத்தின ரென்பதே மேலையடிகளின் பொருளாகும்; விண்ணவர் கோமானாகிய இந்திரன் இயற்றிய நூலென்பது 'ஐந்திரவியாகரணமே' யென இவ் வடிகளுக்கு உரையெழுதிய அரும்பதவுரைகாரரும் அடியார்க்கு நல்லாரும் மொழிந்தனர்; இவ்வுரைகளிலன்றிச், சிலப்பதிகார நூலில் எங்கும் 'ஐந்திரம்' என்னும் பெயர் காணப்படவில்லை. உரைகாரர் கூறியவாறே யெடுப்பினும், 'ஐந்திரம்' இந்திரன் இயற்றிய நூலென்றே மேலையடிகளிற் பெறப்படுகின்ற தல்லாமற், 'பத்ரபாகு’ என்னுஞ் சமண் முனிவன் இயற்றிய 'ஜைநேந்திரம்' என்பது அவற்றின் கட் சிறிதும் பெறப்படவில்லை. சிறிது தமிழறிவுை யார்க்கும் மேலையடிகளின் பொருள் இதுவேயாதல் தெற்றென விளங்காநிற்கும். 'கப்பம்' என்னுஞ் சொல்நீண்ட வாழ்நாள் எல்லையினைக் குறிக்குங் 'கல்பம்' என்னும் வடசொல்லின் திரிபாகுமென்றே உரைகார ரிருவருங் கூறினர்; அதன் உண்மைப்பொருள் அவ்வாறிருக்கத், தங்கருத்து நிரம்புதற் பொருட்டு அச் சொல்லுக்குக் 'கல்பசூத்திரம்’ எனப்பொருள் செய்து ‘பத்ரபாகு என்னும் முனிவன் செய்த கல்சூத்திரத்திலே இந்திரன் ஆக்கிய ஐந்திரவியாகரணத்தின் உண்மை காணாயோ' என அப் பார்ப்பனர் அவ் வடிகளுக்கு உரை யுரைத்துக் கொண்டார். 'ஐைநேத்திரம்' என்னும் நூல் பூஜ்யபாதர் என்னுந் தேவநந்தியாற் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதே யல்லாமற் கி.மு. நான்காம் நூற்றாண்டிலிருந்த பத்ரபாகுவினாலாவது, கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்த மகாவீர ராலாவது இயற்றப்பட்ட தன்று. ‘தனஞ்சயகோசம்' என்னும் 'ஜைநஹரிவம்ஸூ நூலும், போப தேவரென்னும் ஹேம சந்திரரும் ‘பூஜ்யபாதரென்னுந் தேவநந்தியே ஜைநேந்திரம் இயற்றினாராவர்’

எனக்

கூறுமாற்றால் இவ்வுண்மை நன்குவிளங்கும்; பூஜ்யபாதரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/140&oldid=1590763" இலிருந்து மீள்விக்கப்பட்டது