உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

மறைமலையம் - 24

அவர்க்குப் பின்வந்த இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் முதலான எல்லா உரைகாரரும் அதனைத் தொல்காப்பியச் சிறப்புப்பாயிரச் செய்யுளென்றே மொழி தலானும், அப் பாயிரச்செய்யுள் இயற்றினார் தொல் காப்பியனார் என்று களவியலுரையும் தொல்காப்பியனா ரோடு ஒருசாலை மாணாக்கராய பனம்பாரனார் என்று ஏனையுரைகளுங் கூறுதல்கொண்டு அப்பாயிரச் செய்யுள் இயற்றினார் பெயர் ஐயறவுக்கு இடனாயிருப்பினும் எல்லா உரைகாரரும் அதனைத் தொல்காப்பியத்தில் உள்ளதெனக் கிளத்தலின் ஆண்டு அதன்கண் இன்மையானும், அது பிற்காலத்தெழுதி நுழைக்கப்பட்ட தென மெல்லக் கிளந்தார் உரைபொய்யுரையேயாமென விடுக்க.

ஐயுறுதற்கு

ன்

இனி, ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தைக் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிற் படுப்பித்த பார்ப்பனருரையாலுந் தொல்காப்பியம் இரண்டாயிர ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமையுடைத் தென்பது போதரலால், அவ்வளவு பழைமைகூட அதற்குச் சொல்லுதற்கு மனம் பொறாத மற்றொரு பார்ப்பனர், தொல்காப்பியனார் அறிந்த ‘ஐந்திரம்’ என்பது 'ஜைநேந்திரமே' என நாட்டுதற்குப் புகுந்து, சிலப்பதி காரத்தில் அதற்குச் சான்றுகள் தேடிக் காட்டுவாராய்ப்,

புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின் விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவிர்

எனவும்,

கப்பத் திந்திரன் காட்டிய நூலின்

மெய்ப்பாட் டியற்கை விளங்கக் காணாய்

எனவும் போந்த ‘சிலப்பதிகார’ அடிகளிற் குறிக்கப்பட்ட இந்திரன் நூல் 'ஜைநேந்திரேமே” எனப் புகன்றார்.

மேற்காட்டிய அடிகள் சிலப்பதிகாரத்தின் 'காடுகாண் காதை'யில் இருக்கின்றன.மதுரைக்குச் செல்லும் வழி கேட்ட கோவலனுக்கு, அவனை எதிர்ப்பட்ட ஒரு மறையோன் அவ்வழியின் அடையாளங்களைச் சொல்லிக் கொண்டு போம்பொழுது, அழகர்

மலையின் பக்கத்தே மூன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/139&oldid=1590762" இலிருந்து மீள்விக்கப்பட்டது