உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 3

129

பாணினி முனிவர் காலமும் இருதிறப்படுத் துரைக்கப்படு கின்றன. இவை தம் பழைமைகளைக் குறைத்துக் கூறுவார்தங் காலக்கணக்குப் பழைய தமிழ்நூலாராய்ச்சிக்கும், ஏனை எகுபதியர், சாலடியர், எபிரேயர் முதலான மக்களின் நாகரிகப் பழைமைக்கும் இசைந்து வாராமையின் அஃது உண்மையுடைய தாகாது.இருக்குவேத முதலியவற்றின் மிகப் பழைய காலத்தை உண்மையாராய்ச்சியாற் கண்டுரைப்பார்தங் காலக்கணக்கே, பழந் தமிழ்மக்களின் பண்டை நாகரிக வரலாற்றோடு ஒத்துநிற்கக் காண்டலின் அதுவே உண்மையென்று கொள்ளற் பாற்று.'என்பகைவற்கு இரண்டு கண்கள் கெடுவதாயின், எனக்கு ஒரு கண் கெடினுங் கெடுக' என்னும் அழுக்காறுடையான் போல், தமிழ்நூல்களின் பழைமையைக் குறைத்து விடுதற்கு உதவுமாயின் வடநூல்களின் பழைமையுங் குறையினுங் குறைகவென்று பார்ப்பனர் சிலர் அழுக்காற்றாற் கருதுகின்றனர். இதற்குத், தொல்காப்பியனாரைக் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிற் படுப்பிக்கவேண்டிய பார்ப்பனர், கி.மு.முப்பதாம் நூற்றாண்டிற்கு முன்னிருந்த ஐந்திர ஆசிரியன் இந்திரனையுங், கி.மு.ஏழாம் நூற்றாண்டி லிருந்த பாணினி முனிவரையுங் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற் படுப்பித்ததே சான்றாம். பாணினி முனிவர் காலத்தைப் பற்றித் தமக்குமுன் ஆராய்ந்தார் முடிபுகளையெல்லாந் திரும்பவும் நுணு யாராய்ந்து, அவரது காலங் கி.மு.ஏழாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதாதல் ஒருவாற்றானும் இசையாதென்று கிருஷ்ண பேல்வால்கர் என்னும் அறிஞர் 'சமஸ்கிருத வியாகரண வகைகள் என்னுந் தமது நூலில் நன்கு விளக்கி யிருத்தல்

காண்க.

கி

இன்னும் அப் பார்ப்பனர், பனம்பாரனார் உரைத்த பாயிரவுரை தமது கோட்பாட்டிற்கு இடர்விளைத்து அதனைப் பாழ்செய்தல் கண்டு, அது பிற்காலத்தெழுதித் தொல்காப் பியத்துள் நுழைக்கப்பட்டதா யிருக்கலாமென்று மெல்லக் கரைந்தார். இப்போதுள்ள உரைகளில் மிகப் பழையதாகிய நக்கீரனார் தம் 'இறையனாரகப் பொருளுரை” முகத்திலேயே வடவேங்கடந் தென்குமரி யாயிடை என்பது தொல்காப்பியத்தில் உளதாகக் குறிக்கப்பட்டிருத் தலானும்

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/138&oldid=1590761" இலிருந்து மீள்விக்கப்பட்டது