உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

128

மறைமலையம் - 24

ஐந்திரம் நிறைந்த” என்றல் பொருந்தாமையானும், 'ஐந்திரம் என்னும் முதல் நூலை மட்டும் பயின்றார் ஒருவரையோ அவ்வாறு "ஐந்திரம் நிறைந்த” என்றுரைத்தல் ஏற்புடைத்தா மாகலானும், திருநாவுக்கரசு நாயனா ரிருந்த கி.பி.ஆறாம் நூற்றாண்டிலிருந்து தொல்காப்பியனார் நூல் செய்தனராயின் அக்காலத்திற் பெரிதும்பரவி வழங்கிய ‘ ‘கட்டளைக்கலித்துறை’ ‘பல்வகை விருத்தப் பாக்கள்' முதலியவற்றிற்கும் ஏனைச் சொற்கள் சொற்றொடர்கட்கும் இலக்கணங்கூறல் இன்றியமையாததாகவும் அவற்றுள் ஒருசிறிதாயினும்அவர் உரையாமையானும், பௌத்தம் சமணம் முதலான மதக் குறிப்புகளாதல் அம் மதத் தெய்வங்களாதல் அவரால் ஓர் எட்டுணையுஞ் சுட்டப் படாமையானுந், தொல்காப்பியனார் நுவன்ற இலக்கணங்கள் அத்துணையும் மிகப் பழைய ஃதாவது ஐயாயிர ஆண்டுகட்கு முற்பட்ட செந்தமிழ்ச் சொற்பொருள் வழக்குகளையே குறிப்பனவா யிருத்தலானுந், தொல்காப்பியனார் பயின்ற ‘ஐந்திரம்' என்பது ஆரியத்தில் முதல் இலக்கண ஆசிரியனாகி இந்திரன் செய்த நூலேயா மென்று கோடலே தொல்காப்பியனாரிருந்த மிகப் பழைய காலத்திற்கு இசைவதொன்றாமாகலானும், பனம்பாரனார் மொழிந்த ‘ஐந்திரம்’ இந்திரன் ஆக்கிய முதல் நூலேயாகுமன்றி அதற்குப் பன்னெடுங் காலம பின்னெழுந்த 'காதந்தரம்’ முதலியனவாகாவென்று கடைப்பிடித் துணர்ந்துகொள்க.

இனி, ஆங்கில ஆசிரியர் சிலரது கோட்பாட்டைத் தழீஇப் பாணினி முனிவர் கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் இருந்தாரென அவர் மொழிந்ததூஉங் கொள்ளற்பாலதன்று. ஐரோப்பிய ஆசிரியருள்ளும், நம் பரதநாட்டுக் கற்றாருள்ளும் வடமொழி நூற் கால அளவைகளைக் கணக்கிட்டார் தொகை இருதிறப் பட்டு நிற்கின்றது. அவருள் ஒருசாரார் மிகப் பழைய இருக்குவேதப் பாட்டுகளுக்கே கி.மு. 1300 க்குமேற் பழைமை சால்ல ஒருப்படுகின்றிலர். மற்றொரு சாரார் அவை தமக்குக் கி.மு.4000க்கு மேற்பழைமை சொல்வர்.6 இவ்வாறு காளிகட்டத்தின்கண் ஓர் அறிஞர் இருக்குவேதப் பதிகங்கள் பல இற்றைக்கு முப்பதினாயிர ஆண்டுகளுக்குமுன் இயற்றப்பட்டன வாகுமென்று அரிய பல சான்றுகள் கொண்டுவிளக்கி வருகின்றார்? இங்ஙனமே மாபாரதப்போர் நிகழ்ந்த காலமும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/137&oldid=1590760" இலிருந்து மீள்விக்கப்பட்டது