உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 3×

127

முடிக்கப்படும். ஆரியவேத காலத்தையும், குமரிநாடு கடல்கொண்ட காலத்தையும், பாரதப்போர் நிகழ்ந்த காலத்தையும், தலைச்சங்க காலத்தையும், தொல்காப்பியனார் காலத்தையும் மேலே பல முகத்தால் ஆராய்ந்து காட்டிய காலக்கணக்கோடு, ஆரிய இலக்கண முதலாசிரியன் இந்திரன் காலமும், ஈண்டுக் காட்டியவாறு கணக்குச் செய்யின் முழுதொத்து நிற்கக் காண்டலால், இவ் வுண்மை முடிபுக்கு மாறாக, இந்திரனும் அவற்கு இரண்டாயிர மாண்டு பிற்பட்ட

பாணினி முனிவரும் ஒரே காலத்தின் ரென்றாருரை

பெரியதொரு பிழைபாட்டுரை யாம் என்க.

அற்றன்று, இந்திரனே பாணினிகாலத் திருந்தவன் அல்லன்; இந்திரன் ஆக்கிய ஐந்திரன்வழிக் கி.பி.முதல் நூற்றாண்டிற் செய்யப்பட்ட 'காதந்தரமும்’4 கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இயற்றப்பட்ட‘ஜைநேந் திரமும்’5 என்னும் நூல்களே, பனம்பாரனாரது சிறப்புப் பாயிரவுரையில் ‘ஐந்திரம்’ என அவற்றின் முதல் நூற்பெயராற் கூறப்பட்டன வென்று கொள்ளாமோ வெனிற், கொள்ளாம்; இப் பரதநாடெங்கணும் உள்ள ஆன்றோராற் பெரிது பாராட்டிப் பயிலப்பட்டு வந்த பழைய விழுமிய இலக்கண நூலாகிய பாணினீயத்தைப் பயிலாது, அருகிமிகச் சிலராற் பயிலப்பட்டு வந்த 'ஜைநேந்திரம்' முதலிய பின்னூல்களைத் தொல்காப் பியனார் கற்று நிரம்பினா ரென்றல் ஒவ்வாமையானும், தொல்காப்பியனார் பாணினீயத்திற்குப் பிற்பட்டவராயின் ஒரு முதனிலையிற் பிறந்த பல சொற்களை ஆராய்ந்துஅவ்வொரு முதனிலையிற் கொணர்ந்தடக்கும் பாணினீய முறையின் நுட்பமும் பயனும் உணர்ந்து தாமுந் தமிழ்ச்சொற்களை அம்முறையில் ஆராய்ந்தடக்குவரே யன்றி “மொழிப்பொருட் காரணம் விழுப்பத் தோன்றா” (தொல்காப்பியம், சொல், 394) எனக் கூறாராகலானும், ஐந்திரத்தின் வழி வந்த ‘காதந்தரம்’ ஜைநேந்திரம்' முதலிய நூல்கள் ரு காலத்தனவன்றி வெவ்வேறு காலத்தனவாகலின் அவை தம்மையெல்லாந்

தொல்காப்பியனார் ஒருங்கு கற்றற்குக் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இருந்தாலல்லது அவர்க்கு அஃது இயலாமை யானும், அவ்வழி நூல்கள் பலவற்றையுங் கல்லாத ஒருவரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/136&oldid=1590758" இலிருந்து மீள்விக்கப்பட்டது