உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

  • மறைமலையம் - 24

காலத்தவரல்லால், இடைச்சங்க காலத்த வரல்லரென ஓர்ந்துகொள்க.

னி, அவர், தொல்காப்பியச் சிறப்புப் பாயிரச் செய்யுளிற் போந்த “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்பதிலுள்ள ‘ஐந்திரம்” என்பதை ஆராயப்புகுந்து, அது வடமொழியிலுள்ள வியாகரணமா மென்றும், அதனை யாக்கிய இந்திரனும், அட்டாத்தியாயியை ஆக்கிய பாணினியும் ஒரே காலத்த வராதல் வேண்டுமென்றும், பாணினி கி.மு. மூன்றாம் நூற்றாண் டிலிருந்தவாரகலான் ஐந்திரம் உணர்ந்த தொல்காப்பியர் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கும் பிற்பட்டவராதல் வேண்டு மென்றுங் கூறுவதுடன், பனம்பாரனார் இயற்றிய சிறப்புப் பாயிரச் செய்யுள் பிற்காலத்தே செய்து தொல்காப்பியத்தில் நுழைக்கப்பட்ட தாயிருக்கலாமென்றும் நுவல்கின்றார். இவ்வாறுரைக்கும் உரைகளின் இடையே ஒன்றினுந் துணிவு பிறவாமலுந் தக்க சான்றுகள் காட்டாமலும் முன்னொடு பின் முரணுமாறு இவர் செய்யுங் குழப்பங்கள் பல'

2

வடமொழி இலக்கண நூலாசிரியரில் இந்திரனே முதலாசிரியனாவனென்பது தைத்திரீய சம்ஹிதையிற் (7, 4, 7) சொல்லப்பட்டிருக்கின்றது. தைத்தீரிய சம்ஹிதை கிருஷ்ணயஜுர் வேதத்தைச் சேர்ந்ததாகையால், அஃது ற்றைக்கு நாலாயிரத்து ஐந்நூறாண்டுகளுக்கு முற்பட்ட தென்பது மேற்காட்டியவாற்றால் தானே போதரும். நாகோஜிபட்டரது 'பரிபாஷேந்து சேகரத்'திற்கு உரை யழுதிய வைத்தியநாதரும் “பழைய வையா கரணிகளாவார் இந்திரன் முதலாயினார்” என்றுஅவ்வுரைமுகத்திற் கூறினார். இந்திரனுக்குப் பின்னும் பாணினிக்கு முன்னும் ஒருவர்பின் னொருவராய் வந்த வடமொழி இலக்கண ஆசிரியர் அறுபத்து நால்வரென்பது பெறப்படுதலால்,3 ஓர் ஆசிரியர்க்கு முப்பதாண்டுகள் விழுக்காடு வைத்துக் கணக்குச்செய்யவே அறுபத்து நால்வர்க்கும் ஓராயிரத்துத் தொளாயிரத் திருபஃது யாண்டுகள் ஆகின்றன. இனிப் பாணினி முனிவர் இருந்த காலம் கி.மு. 700 என்று முடிவு செய்யப்பட்டிருத்தலால், வடமொழி முதல் இலக்கண நூலாசிரியன்இந்திரன் இருந்தது இற்றைக்கு நாலாயிரத்தைந் நூறியாண்டுகளுக்கு முன்னென்பதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/135&oldid=1590757" இலிருந்து மீள்விக்கப்பட்டது