உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3×

125

கரைந்தார். 'பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி' என்பான் குமரிநாடு கடல்வாய்ப்புகுவதன்முன் அஃதாவது இற்றைக்கு 5000 ஆண்டுகட்கு முன் தலைச்சங்க б காலத்தில் இருந்தோனாவன் என்பதை மேலே 701 ஆம் பக்கத்தில் விளக்கினாம். அவன்மேற் பாடப்பட்ட செய்யுள் ஒன்றில் ‘ஞமன்' என ஞகரத்தை முதலாக உடைய சொல் (புறம்.

6) ஒன்றுவரக் காண்கின்றேம். தொல்காப்பியனார்

66

இப்பாண்டிய அரசன் காலத்திலேனும், அல்லது அவற்குப் பின்னேனும் இருந்தனராயின், தாம்இயற்றிய இலக்கண நூலில் ஞகரத்தை முதலாகவுடைய சொல்லையுந் தழுவியிருப்பர். ஆனால், அவர் தங்காலத்தில் ஞகரத்தை முதலாகவுடைய சொல் தமிழில் வழங்காமையின், அதனை விலக்கி ஆ, எ, ஒ எனும் மூவுயிர் ஞகாரத்துரிய” (எழுத்து, 64) என்று சூத்திரஞ் செய்வாராயினர். இவ்வொரு பெருஞ்சான்று கொண்டே தொல்காப்பியனார் பாண்டியன் முதுகுடுமியின் காலத்திற்கும் அஃதாவது இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகளுக்கும் முன்னரே இருந்தா ரென்பது நன்கு துணியப்படும். இன்னும், கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அஃதாவது இற்றைக்கு இரண்டா யிரத்து இருநூறு ஆண்டுகளுக்குமுன் தொல்காப்பியனார் இருந்தனராயிற், சிறிதேறக்குறைய அக்காலத்தில் இயற்றப்பட்ட 'பரிபாடற், செய்யுட்களிற் காணப்படுஞ் ‘சகடம்’ ‘சடை, சண்பகம், 'சமம்' 'சமழ்ப்பு' சமைப்பின்' முதலான சகர முதற் றமிழ் மொழிகளையும் 'ஞமன்’ என்னும் ஞகரமுதற் றமிழ் மொழியினையுந் தழுவியிருப்பர்; ஆனால், அவர்தங் காலத்தில் அச் சொற்கள் வழங்காமையின் ஞகர முதன்மொழி தமிழில் வரா என்று சூத்திரஞ் செய்தாற் போலவே,

சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே

அ ஐ ஒள வெனும் மூன்றலங் கடையே

(எழுத்து, 62)

எனச் சகர முதன்மொழிகளுந் தமிழில் வரா எனச் சூத்திரஞ்செய்திட்டார். ஆகவே, இச் சொற்கள் தமிழில் வழங்கிய கி.மு.மூன்றாம் நூற்றாண்டிற்கும், ஞகர முதன் மொழி வழங்கிய கி.மு. முப்பதாம் நூற்றாண்டிற்கும் முன்னே தொல்காப்பியனார் இருந்தமை கன்மேற் கட்டிய அரண்போல் நாட்டப்படுமென்க. எனவே, தொல்காப்பியனார் தலைச்சங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/134&oldid=1590756" இலிருந்து மீள்விக்கப்பட்டது