உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

23. தொல்காப்பிய காலத் தொடர்ச்சி

தால்

இனி, னி, ஆசிரியர் தொல்காப்பியனாரைக் கிறித்து பிறத்தற்குமுன் முந்நூறாம் ஆண்டிலிருந்த பாணினி முனிவர் காலத்திற்கும் பின்னே வைத்தல் வேண்டுமென வரைந்த பார்ப்பனருரை ஆராயற்பாற்று. யாம் ‘பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்' என்ற நூலில் ஆசிரியர் காப்பியனார் இற்றைக்கு நாலாயிரத்து முந்நூறாண்டுகட்கு முன் இருந்தாரென்று பலஏதுக்கள் கொண்டு நாட்டிய காலத்தைத், தாமும் பல தக்கசான்றுகள் காட்டி மறாமல், யாம் கூறிய காலக்கணக்கு அளவுக்கு மிஞ்சியதெனவும், ஆகவே அதனை மறுத்தல் வேண்டா வெனவும் அப் பார்ப்பனர் மொழிந்தனர். தமிழர் அல்லாத ஆரியர், எகுபதியர், சாலடியர், பாபிலோனியர் முதலியோரெல்லாம் ஐயாயிரம் பதினாயிரம் ஆண்டுகட்கு முன்னரே நாகரிகத்திற் சிறந்து விளங்கினா ரென்று கூறுவதெல்லாம் அளவுக்கு மிஞ்சிய தாகாது! ஆனால் தமிழர் நாலாயிர ஆண்டுகட்கு முன்னரே இலக்கண இலக்கியங் களுடையராய் நாகரிகத்திற் சிறந்து விளங்கினா ரென்றுரைப்பது மட்டுந்தான் இப்பார்ப் பனருக்கு அளவுக்கு மிஞ்சியதாய்த் தோன்றி விட்டது! இவர் ஏதொரு சான்றுங் காட்டாது, உண்மைச் சான்றுடன் எழுதிய எமதுரையினைத் தாம் கருதுதற்குரித்தன்றென விட்டனரேனும், அறிவான் மிக்கோர் எமதுரையின் மெய்ம்மையும் அவருரையின் பொய்ம்மையும் எளிதிற் றேர்ந்து எமதுரையினைக் கைக்கொள்வ ரென்க. அது கிடக்க.

முதலில் இவர் தொல்காப்பியம்

டைச் சங்க நூலென்னும் ஒரு பொருந்தாவுரையைத் தழுவி, அவ் விடைச்சங்கங் கிறித்து ஆண்டுக்கு முன்னும், கடைச்சங்கம் அவ்வாண்டின் துவக்க காலத்திலும் இருந்தனவெனக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/133&oldid=1590755" இலிருந்து மீள்விக்கப்பட்டது