உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 3

அை

149

தாகை தொகையாய் வந்த யவனராகிய கிரேக்கரே ‘பகல்வழியள' வினைத் தமிழர்பாற் கற்றுணர்ந்து, அதனைத் தாம் கற்றுணர்ந்தபடியே வடசொற் பெயர்களாற் றமது வ கிரேக்க மொழியில் வரைந்து வைப்பாராயினர். அவ்வாறவர் வரைந்துவைத்த வானூற்கல்வி அவர் கூட்டங்கூட்டமாய்க் குடியேறிய வடநாட்டிற் பரவவே, அங்கிருந்த வராகமிகிரரை யுள்ளிட்ட வடநூற் புலவர்கள் அப் பகல்வழியளவினைத் தாமுங் கற்று, அதன்கட் காணப்பட்ட பெயர்களுங் குறியீடுகளுந் தமது ஆரியமொழிக் குரியவாயிருத்தலைக் கண்டு மகிழ்ந்து, அவை யெல்லா வற்றையும் ஒருங்கே தழுவி 'ஹோராசாஸ்திரம்' எனப் பெயரிய ஒரு வான் நூல் எழுதி, அங்ஙனம் எழுதினுந் தாம் அறிந்த அப் பகல்வழியளவு தமக்குக் கிரேக்கர் பாலிருந்துங் கிடைத்ததென்பது தோன்ற அதற்கு 'ரோமகசித்தாந்தம்’, ‘பெளலிகசித்தாந்தம்”, என்னும் பெயர் களையுங் கிளந்து சூட்டினர்.25 இங்ஙனமாகக் கிரேக்கர் 'பகல்வழியள வினைத் தமிழர்பாலிருந்து கற்றது கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலும், அதனை வடநாட்டவராகிய ஆரிய பட்டரும் வராகமிகிரருங் கிரேக்கர் பாலிருந்து கற்றது கி.பி.ஐந்தாம் நூற்றாண்டின் துவக்கத்திற்கும் பின்னுமே யாகலின், இதனைக் கி.பி. முதனூற்றாண்டுக்கு முன்னரே யறிந்திருந்த தமிழ்ச் சான்றோரே இதனை இவ்விருவேறினத் தார்க்குங் கற்பித்த ஆசிரியராவரென்றுணர்ந்து கொள்க.

அற்றாயினுஞ், சாலடிநாட்டிலிருந்த பாபிலோனியர் மிகப் பழைய நாளிலேயே வான்நூலாராய்ச்சியில் தேர்ச்சி பெற்றிருந்தா ரென்பது எல்லார்க்கும் ஒப்பமுடிந்ததாதலின், அவரொடு வாணிகம் நடாத்திய பண்டைத் தமிழரே பகல்வழியள’வினை அவர்பாற் கற்றுணர்ந்தாரென்றாற் படும் இழுக் கென்னையெனிற்; கூறுதும்; பண்டைச் சாலடியராதல், இருக்குவேத காலத்து வடவராதல் வானூலாராய்ச்சியில் நிரம்பத் தேர்ந்தவரென்று கோடல் அமையாது; என்னை? சாலடியர் அதிற் தேர்ச்சி பெற்றது உண்மையாயின், அவர்பாற் ‘பகல்வழியௗ'வோடு ‘மதிவழி யளவுங்' காணப்படுதல் வேண்டும், மற்றஃது அவர்பாற் காணப்படாமையானும், னும், இனி இருக்குவேத காலத்து வடவர் அதிற்றேர்ச்சி பெற்றவராயின் அவர்பால் 'மதிவழியளவு’ காணப்படுமாறு போலப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/158&oldid=1590782" இலிருந்து மீள்விக்கப்பட்டது